லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க முதுகு வலி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

07 Jun, 2025 | 08:35 PM
image

இன்றைய திகதியில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளாந்தம் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது ஏழு அல்லது எட்டு கிலோமீற்றர் வரை நடப்பர். நாளடைவில் இந்த தூரம் இரண்டு கிலோமீற்றராக குறைந்து விடும். இன்னும் சிறிது நாட்களில் இவர்கள் நடப்பதற்கே சிரமப்படுவார்கள். இத்தகைய அறிகுறி எம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்க கூடும். இதனை மருத்துவ மொழியில் லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் என குறிப்பிடப்படும் கீழ்ப் பக்க முதுகு பகுதியில் நரம்பு அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணர்ந்து, அதற்கான சிகிச்சையை பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

முதுகு வலி, குறிப்பாக கீழ் முதுகு பக்கத் வலி, இரண்டு கால்களிலும் பரவும் நிலை , கால் வலி, தசை பிடிப்பு, நடக்கும் போதோ நிற்கும் போதோ முன்னோக்கி நகரும் போதோ வலி அதிகரித்தல், கால்களில் உணர்வின்மை அதாவது மரத்துப்போதல் , பலவீனம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் முதுகு தண்டுவட நரம்பியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும்.

முதுமையின் காரணமாக ஏற்படும் தேய்மானம் , முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் வீக்கம், இதனால் முதுகெலும்பு பகுதிகள் உள்ள குழாய் பகுதிகளின் அகலம் குறைகிறது. வேறு சிலருக்கு ஓஸ்டியோஓர்தரைடிஸ் எனும் தசை நார் தடிமனாகும் பாதிப்பு ஏற்படுதல்,  அதிர்ச்சி, விபத்து போன்ற காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை வைத்தியர்கள் எக்ஸ்ரே - எம் ஆர் ஐ - சிடி ஸ்கேன் - போன்ற பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து நரம்பியல் செயல்பாடு திறன் குறித்த பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்.

பாதிப்பின் தன்மையை பொறுத்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் நிவாரணம் வழங்குவர் . இவை முழுமையான நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் கூடுதலான சில பரிசோதனைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் நரம்பு சுருக்கத்தை நவீன சத்திர சிகிச்சை மூலம், சீரமைத்து நிவாரணத்தை அளிப்பர். இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் - உணவு முறை மாற்றங்கள் - இயன்முறை சிகிச்சை - உடற்பயிற்சி-  நடை பயிற்சி- ஆகியவற்றை தொடர்ந்தும் , உறுதியாகவும் பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து ஆயுள் முழுவதும் நிவாரணத்தை பெறலாம்.

வைத்தியர் விக்னேஷ்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20
news-image

களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய...

2025-06-05 13:51:58
news-image

இன்ஹேலரை பாவித்தால் குருதி அழுத்தம் அதிகரிக்குமா?

2025-06-04 18:15:59
news-image

வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-06-02 16:05:50
news-image

பிறந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் மைலோமெனிங்கோசெல் பாதிப்பிற்குரிய...

2025-05-26 17:06:53
news-image

நன்மையை தரும் உணவு எது?

2025-05-24 17:57:25
news-image

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் அறிகுறிகள் என்ன?

2025-05-24 17:59:20