எம்மில் பலரும் பல வகையினதான காரணங்களுக்காக வைத்திய சாலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவர். இதில் சிலர் நாட்டப்பட்ட பாதிப்பிற்காகவும், சிலர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கியதற்காகவும், சிலர் முதுமை காரணமாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாத கணக்கில் சிகிச்சை மேற்கொண்டு வருவர். இவர்கள் நலம் பெற வேண்டி நெருங்கிய உறவினர்கள் இறைவனை வழிபட தொடங்கி இருப்பர்.
இந்த தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் அடைந்து வீடு திரும்புவதற்காகவும் , அவர்களின் ஆரோக்கியம் மேம்படுவதற்காகவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேகமான தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் சிறிய சதுர வடிவிலான நீல வண்ண துணி - பன்னீர்- காய்ந்த கண்டங்கத்திரி -அதிமதுரம்- வசம்பு - சுக்கு - கருப்பு எள்
முதலில் நீல வண்ண துணியை தண்ணீரில் நனைத்து அதனை உலர வைக்கவும். அவை உலர்ந்த பின் அதில் சிறிதளவு காய்ந்த கண்டங்கத்திரி, அதிமதுரம், வசம்பு, சுக்கு, கருப்பு எள் ஆகியவற்றை வைத்து முடிச்சிட வேண்டும். இந்த முடிச்சினை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணையை ஊற்றி தீபமேற்ற வேண்டும்.
இந்த தீபத்தை அருகில் இருக்கும் தொன்மையான சிவாலயத்திற்கு சென்று இறைவனை பிரார்த்தித்து தெற்கு திசை நோக்கி இந்த தீபத்தை ஏற்றி, எமதர்ம ராஜனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித கடினத்தையும் எதிர்கொள்ளாமல் எளிதாக சிகிச்சை பெற்று அந்த சிகிச்சை வெற்றி அளித்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என மனமுருக பிரார்த்தித்தால் இந்த பிரத்யேக தீப வழிபாட்டை இறை சக்தி ஏற்றுக்கொண்டு அருள் புரிவார்.
மேலும் இந்த பிரத்தியேக தீப வழிபாட்டை மூன்று வாரங்கள் - ஐந்து வாரங்கள் அல்லது ஏழு வாரங்கள் வரை தொடர்ச்சியாக மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.
இதனை சிகிச்சை பெறுபவரின் பிறந்த கிழமை அல்லது சனிக்கிழமைகளில் மேற்கொண்டால் கூடுதல் பலன் உண்டு. இதன் காரணமாக நோயாளிகள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவர்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM