இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கும், பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வானது, பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன்தொண்டமான் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேச சபைகளிலும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை, ஆகிய நகர சபைகளிலும், நுவரெலியா மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
மேலும், வலப்பனை பிரதேச சபையில் நாட்காளி சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.
பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஹல்துமுள்ள, ஹப்புதலை, லுனுகலை ஆகிய பிரதேச சபைகளில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 5 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 9 உறுப்பினர்களையும் மொத்தமாக பதுளை மாவட்டத்தில் பெற்றுக்கொண்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாத்தளை, இரத்தோட்டை, அம்பன்கங்ககோரளை ஆகிய பிரதேச சபைகளிலும், மாத்தளை மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு மொத்தமாக 6 உறுப்பினர்களை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது.
மேலும் கண்டி மாவட்டத்தில் பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஎட்ட ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 1 உறுப்பினரையும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பிரதேச சபையில் 1 உறுப்பினர் உள்ளடங்களாக மொத்தமாக ஆறு மாவட்டங்களிலும் 62 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் ராஜதுரை மற்றும் கட்சியில் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளடங்களாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM