ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் வட்டிலப்பம்

07 Jun, 2025 | 04:22 PM
image

வட்டிலப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.........

தேவையான பொருட்கள்

  • முட்டை- 4
  • தேங்காய் பால்- ½ கப்
  • சர்க்கரை- 1 ஸ்பூன்
  • கருப்பட்டி- 1½ கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  2. பின் அதில் தேங்காய் பால், சர்க்கரை, கருப்பட்டி, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கருப்பட்டி கரையும்வரை நன்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து இதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதற்குள் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து அந்த பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி போட்டு பின் இட்லி பாத்திரத்தை மூடி 30 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான வட்டிலப்பம் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right