" சோயா 65" - விடுமுறை நாட்களில் இப்படி செய்து பாருங்கள்

07 Jun, 2025 | 03:52 PM
image

சோயா 65 செய்வது எப்படி என்று பார்ப்போம்.....

தேவையான பொருட்கள் 

  • சோயா - 1 கப் 
  • வெந்நீர் 
  • உப்பு 
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 
  • காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி 
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  • எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை   
  • புட் கலர் - 1 சிட்டிகை  
  • கடலை மாவு - 2 மேசைக்கரண்டி 
  • சோள மாவு - 1 மேசைக்கரண்டி 
  • அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி  
  • எண்ணெய்  
  • கறிவேப்பில்லை 

செய்முறை 

1. சோயாவை வெந்நீரில் போட்டு 30 நிமிடம் ஊறவைக்கவும்.

2. 30 நிமிடம் கழித்து, சோயாவை பிழிந்து எடுத்து வேறு பாத்திரத்தில் போடவும்.

3. இதில் மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு, பெருங்காயத்தூள் போட்டு கிளறவும்.

4. அடுத்து இதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு போட்டு கிளறவும்.

5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்யை சூடு செய்யவும்.

6. சோயாவை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right