“அதுல” வுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதோ அரசியல் நோக்கம் கொண்டதோ அல்ல - சிறைச்சாலைகள் திணைக்களம் 

07 Jun, 2025 | 05:29 PM
image

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவர் 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதோ  அரசியல் நோக்கம் கொண்டதோ அல்ல என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து பல  விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

நிதி நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்ன  4 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

மோசடி வழக்கு தொடர்பில் அதுல திலகரத்னவுக்கு எதிராக நீதிமன்றினால் 2 மில்லியன் ரூபா அபராதமும் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் வெசாக் பொதுமன்னிப்பின் கீழ் அதுல திலகரத்னவுக்கு எதிரான அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதுல திலகரத்னவுக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை குறைத்தல் ஆகியவை காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு அதுல திலகரத்ன தகுதி பெற்றுள்ளார்.

எனவே, அதுல திலகரத்ன ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதோ  அரசியல் நோக்கம் கொண்டதோ அல்ல என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39