யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னருமான காலகட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில் பொங்கல் வழிபாடு இடம்பெற்றுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கிளிநொச்சி பிரிவினரால் இந்த நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 140வது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.