ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் !

Published By: Digital Desk 2

07 Jun, 2025 | 12:57 PM
image

இந்தியாவின், பீகாரின் பாட்னா நகரில் ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் ஒருவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

பொதுவாக, இந்திய ரயில்வே விதிமுறைகளின் படி சைக்கிள் அல்லது  மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை பயணிகள் தாங்கள் உடன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

அவை பொதிகள் சேவையின் மூலம் மட்டுமே அனுப்ப முடியும். எனினும், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலுக்குள், பயணிகள் இருக்கைக்கு இடையில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் இளைஞனின் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ "பீகாரின் சக்தி" என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மோட்டார் சைக்கிளை செலுத்தும் அந்த இளைஞனின் செயல் ரயிலில் பயணித்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல  சமூக ஊடக பாவனையாளர்கள் இந்தப் பாதுகாப்பு மீறலுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

இது ஒரு ரீல்ஸ் வீடியோவுக்காக ஏற்கனவே திட்டமிட்டு எடுக்கப்பட்டதா ? அல்லது ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது தொடர்பாக தற்போது ரயில்வே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50