நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை நகரத்திலும், அதனை அண்மித்த பகுதியிலும் இன்று காலை முதல் நண்பகல் வரை மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன.

பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணிகள், கொட்டகலை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டதோடு, டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல இடங்கள் இதன்போது இனங்காணப்பட்டு ஒழிக்கப்பட்டது.

அரசாங்கமும் டெங்கு நோய் பரவும் வகையில் சுற்றுப்புறச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துவருவதும் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது.

இச்சிரமதானப் பணிகளுக்கு நுவரெலியா பிரதேச சபையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.