கொழும்பு, ஜுன் 01,2025 - கிறேஷியன் நிதியம் மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஆகியன ஒன்றிணைந்து, ஆங்கில படைப்பாக்க எழுத்தாக்கத்திற்கான 32வது கிறேஷியன் விருது மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான எச்.ஏ.ஐ. குணதிலக விருது ஆகியவற்றின் வெற்றியாளர்களை பெருமையுடன் அறிவித்துள்ளன.
இப்பரிசு நிகழ்வின் ஏற்பாட்டு இடத்திற்கான கூட்டாளரான Cinnamon Life City of Dreamsஇல் இப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், மிகச் சிறந்த சமகால எழுத்தாக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு சாதனைகளைப் போற்றிக் கொண்டாடுவதற்கு இலங்கையின் ஒட்டுமொத்த இலக்கிய சமூகத்தையும் இந்நிகழ்வு ஈர்த்திருந்தது. Sarasavi Books மற்றும் British Council ஆகியனவும் இந்நிகழ்வுக்கு ஆதரவளித்துள்ளன.
‘Katha: Gossip, Rumours, and Idle Talk’ என்ற அற்புதமான படைப்பிற்காக 32வது கிறேஷியன் பரிசு சவின் எதிரிசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவரது அற்புதமான படைப்பு இறுதிச்சுற்றில் பின்வரும் போட்டியாளர்களின் படைப்புக்களுக்கு மத்தியிலிருந்து வெற்றி பெற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்டது: உபாலி மகாலியன அவர்களின் He Was God's Child Too’;அஜித் பெரகும் ஜெயசிங்க அவர்களின் ‘Nowhere No Return’; விஹங்கா பெரேரா அவர்களின் ‘‘The Warm South’ மற்றும் ரனுதி குணவர்த்தன அவர்களின் Wombful of Weeds’.
புலிட்சர் பரிசை வென்ற கவிஞரும் கட்டுரையாளரும் NYU அபுதாபியில் இலக்கியம் மற்றும் படைப்பாக்க எழுத்தாக்க பேராசிரியருமான கிறெகரி பார்ட்லோ அவர்கள் 32வது கிறேஷியன் பரிசின் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆராய்ச்சியாளரும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளருமான கலாநிதி கிறிஸ்டல் பெய்ன்ஸ் அவர்களும், விருது வென்ற பத்திரிகையாளரும், வாழ்க்கை வரலாற்று ஆசிரியருமான சாவித்ரி ரொட்றிகோ ஆகியோரும் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். நடுவர் குழு விடுத்துள்ள அறிக்கையில், Kata Katha என்பது நகைச்சுவையான, துணிச்சலான மற்றும் ஆய்வுமிக்க சிறுகதைகளின் தொகுப்பாகும், இது வாய்வழி அறிவு அமைப்பின் ஒரு வடிவமான “Kata Katha” அல்லது “கிசுகிசு" நாகரிகத்தின் அத்திவாரமாகும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், அல்லது ‘Kata Katha’, அபத்தமான, மாயாஜால மற்றும் பகுத்தறிவற்றவற்றின் வழியாகச் சென்று, சோகத்தை நையாண்டியுடன் நேர்த்தியாக சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான கண்ணோட்டம் மற்றும் கதை மூலம் வாசகர்களுக்கு பல்வேறு வாழ்க்கைத் துறைகளைச் சேர்ந்த இளம் கதாபாத்திரங்களின் தொகுப்பை வழங்குகிறது.
WidKeirdo என்ற புத்தகத்தை சிங்கள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமைக்காக இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்ற எச்.ஏ.ஐ. குணதிலக பரிசின் வெற்றியாளராக பிரியங்வதா பெரேரா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் நிதியம் அதேசமயத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்களம் மற்றும் மொழியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கிறிஷாந்த பெட்ரிக்ஸ், கவிஞரும் விமர்சகரும் மற்றும் தமிழ் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கின்றவருமான ஷாஷ் ட்ரெவிட், மற்றும் விளம்பரம் மற்றும் இலக்கியம் ஆகிய உலகங்களை ஒன்றிணைக்கும் படைப்புக்களை வழங்கும் படைப்பாக்க தொழில் வல்லுனரும், இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான திலீப அபேசேகர ஆகியோர் இவ்விருதின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்த மொழிபெயர்ப்பை மிகவும் போற்றிய நடுவர் குழு இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “மொழிபெயர்ப்பிற்கான 2025 HAIG பரிசின் வெற்றியாளர் ஒரு சிறந்த வழிகாட்டி. சிங்கள மூல மொழியில் உள்ள குரல்களும், உயிர்களும் வேறு ஒரு இடத்திற்குச் சொந்தமானவை என்ற உணர்வைக் காணும் வகையில் சிங்களத்திற்கும் ஆங்கிலத்திற்கும் இடையில் ஒரு இணைப்புப்பாலத்தை உருவாக்கியுள்ளார். வெற்றிபெற்ற மொழிபெயர்ப்பாளர் காண்பித்துள்ள மொழியியல் வித்தை சிங்கள மூலத்தின் சிக்கலான வார்த்தை விளையாட்டை அற்புதமாக கையாண்டமை வியக்கத்தக்கதாகவும், மற்றும் மிகவும் திருப்திகரமானதாகவும் இருந்தது” என்று குறிப்பிட்டனர்.
கிறேஷியன் நிதியத்தின் இணைத் தலைவர்களான நபீஸா அமிருதீன் மற்றும் நிஸ்றீன் ஜெஃபர்ஜி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “(name of GP Winner) மற்றும் (HAIG Winner) ஆகியோருக்கு நிதியம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கையின் இலக்கியம் எவ்வளவு தூரம் படைப்பாற்றல் மிக்கவை மற்றும் ஆழமானவை என்பதற்கு சான்றாக இந்த ஆண்டின் வெற்றிப் படைப்புக்கள் காணப்படுவதுடன், எமது இலக்கிய சமூகத்திற்கு உந்துசக்தியாகவும் மற்றும் பெருமை சேர்ப்பிப்பனவாகவும் மாறியுள்ளன. எமது இலக்கியத் துறையை தொடர்ந்தும் உயிர்ப்பிக்கும் மகத்தான பங்களிப்புக்களுக்காக இரு வெற்றியாளர்களுக்கும் மற்றும் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜெயசூரிய அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“இலக்கியத்தின் மேன்மையை வளர்க்கும் கிறேஸியன் நிதியத்தின் இலக்கிற்கு ஆதரவளிப்பதையிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை பெருமை கொள்கின்றது. இந்த ஆண்டு வெற்றியாளர்கள், இலங்கை எழுத்தாளர்கள் எவ்வாறு தங்கள் பால் கவனத்தை ஈர்க்கவும், ஊக்கப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபிக்கின்றனர்.
‘Empowering the Nation for Tomorrow’ என்ற எங்கள் குறிக்கோளின் கீழ், சமூகத் தடைகளை எதிர்த்துப் போராடுதல், உரையாடலை ஊக்குவித்தல் மூலம் ஆரோக்கியமான மற்றும் முற்போக்கான இலங்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எங்கள் சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை நோக்கத்துடன் மிகச்சரியாக ஒன்றித்து செயல்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, 2019 ஒக்டோபர் தொட்டு கிறேஷியன் நிதியத்தின் பிரதான அனுசரணையாளராகச் செயற்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு நிகழ்வு இடத்திற்கான கூட்டாளராக Cinnamon Life City of Dreams இணைந்துள்ளது. இப்பரிசு நிகழ்வு அடங்கலாக, நிதியத்தின் பல்வேறுபட்ட செயற்திட்டங்களுக்கு ஓயாத ஆதரவை வழங்கி நீண்டகாலமாக கூட்டாண்மைகளைப் பேணி வருகின்ற Sarasavi Books, The British Council, Wijeya Newspapers மற்றும் Marga Institute ஆகியவற்றின் உறுதுணையையும் இந்நிதியம் கொண்டுள்ளது.
NYUAD உடனான தனது ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக,‘Imagining Your Voice on Page’ என்ற கருப்பொருளில் செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களையும் கிறேஷியன் நிதியம் ஏற்பாடு செய்யும். பேராசிரியர் பார்ட்லோ அவர்களால் நடாத்தப்படும் இச்செயலமர்வுகள் படைப்பாக்கத்திறன் மிக்க வழியில் எழுத்தாக்கத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்த தனித்துவமான, ஆழமான அறிவை எழுத்தாளர்களுக்கு வழங்கும். இலங்கையின் இலக்கிய சமூகத்தில் புதிய திறமைசாலிகளை ஈர்த்து, வளம்பெறச் செய்வதில் நிதியத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அங்கமாக இந்நிகழ்ச்சித்திட்டங்கள் அமைந்துள்ளன.
எதிர்வரும் கிறேஷியன் நிகழ்வுகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள www.gratiaen.comஎன்றகிறேஷியன் நிதியத்தின் இணையத்தளத்தை அல்லது அதன் சமூக ஊடக பக்கங்களைப் பாருங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM