இன்றைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு தங்களுடைய பிள்ளைக்கு நோய் எதிர்ப்பு திறன் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு.
நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருந்தால் அதனை மேம்படுத்துவதற்காக வைத்தியர்களிடம் ஆலோசனைகளும் கேட்பது உண்டு.
இந்நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கிறது என்றால்... அதனை எப்படி கண்டறிவது? என்பது குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு வழி காட்டுகிறார்கள்.
உங்களுடைய பிள்ளை பிறந்து 28 நாட்களுக்குள் ஏதேனும் சுகவீனம் ஏற்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால்.. உங்களுடைய பிள்ளைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என அவதானிக்கலாம்.
மேலும் குழந்தை பிறந்து பத்து நாட்களுக்குள் பிளசன்டா எனப்படும் நஞ்சுக்கொடி தானாக உதிர வில்லை என்றால்... பிள்ளைக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கிறது என அவதானிக்கலாம்.
மேலும் பிள்ளைகளுக்கு பிரைமரி இம்யூனோடிஃபிசியன்சி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்.. அதனை மேம்படுத்துவதற்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் நடைமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
மேலும் சில பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றாலோ.. அல்லது அவர்களுடைய எலும்பு மஜ்ஜையிலிருந்து உற்பத்தியாக வேண்டிய ஆரோக்கியமான ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் செயல் திறனில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ... அவர்களுக்கு பிறக்கும்போதே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடும்.
இத்தகைய தருணங்களில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடல் எடை, தலையின் சுற்றளவு , வளர்ச்சி ஆகியவற்றில் குறைபாடு ஏற்படக்கூடும்.
இதனை உடனடியாகவும் , துல்லியமாகவும் அவதானித்து வைத்திய நிபுணர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
மேலும் பிள்ளைகள் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அடிக்கடி காய்ச்சல் சுகவீனங்கள் ஏற்பட்டால்.. அவர்களுடைய நோய் எதிர்ப்புத்திறன் குறித்தும் வைத்தியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
அதே தருணத்தில் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
ஆறு மாதத்திற்கு பிறகு தான் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலுடன் வேறு ஆரோக்கியமான உணவினை பசியாற வழங்க வேண்டும். இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வைத்தியர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM