இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையினதான தேவைகள் ஏற்படுவதால்.. அதனை பொறுத்துதான் அவர்களின் கோரிக்கை அமைகிறது.
மேலும் இறை சக்தியிடம் நாம் கேட்கும் வரங்களும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இந்தத் தருணத்தில் நீங்கள் கேட்கும் விடயத்தை பெறுவதற்கு எம்முடைய முன்னோர்கள் சூட்சமமான ஒரு வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: அகல் விளக்கு- கடுகு எண்ணெய் ஆறு கிராம்பு.
வியாழக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள்ளாக அருகில் இருக்கும் அரச மரத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த அரச மரத்தின் அடிப்பகுதியில் கடுகு எண்ணெய் ஊற்றி அதில் ஆறு கிராம்பினை இட்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள். அந்த தருணத்தில் அரச மரத்திடம் உங்களுடைய கோரிக்கைகளை சமர்ப்பணம் செய்யுங்கள்.
மேலும் அந்த தீபத்தை ஏற்றி, 24 நிமிடம் வரை அங்கு இருக்க வேண்டும் அல்லது அந்த மரத்தை வலம் பெற வேண்டும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து 24 வியாழக்கிழமைகளில் மேற்கொண்டால் நீங்கள் எதை நினைத்து இந்த வழிபாட்டினை தொடர்ந்தீர்களோ..! அது நிறைவேறுவதை காணலாம்.
பொதுவாக அரச மரத்தை திங்கள் கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன்னதாக சுற்றி வந்தாலும் பலன் உண்டு. அதே தருணத்தில் பௌர்ணமியும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை வலம் வந்தாலும் உங்களது கோரிக்கை நிறைவேறும்.
இவற்றையெல்லாம் விட கடுகு எண்ணெயும், ஆறு கிராம்பும் கலந்த தீபம் ஏற்றி வியாழக்கிழமைகளில் வழிபட்டால்.. உங்களது பிரார்த்தனை நிறைவேறுவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM