ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையுடனான பெருமையுடனான கூட்டாண்மையுடன், இலங்கை எழுத்தாளர்களின் ஆங்கில படைப்பு எழுத்தின் சிறந்த படைப்புகளைக் கொண்டாடும் 32வது கிறேஷியன் பரிசுக்கான தெரிவுப் பட்டியலை கிறேஷியன் அறக்கட்டளை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் புகழ்பெற்ற நடுவர் குழுவிற்கு புலிட்சர் பரிசு பெற்ற கவிஞர், கட்டுரையாளர் மற்றும் NYU அபுதாபியில் இலக்கியம் மற்றும் படைப்பு எழுத்துப் பேராசிரியரான பேராசிரியர் கிறெகரி பார்ட்லோ தலைமை தாங்கினார்.
இந்த செயல்முறையைப் பற்றி பேராசிரியர் பார்ட்லோ அவர்கள் கருத்து வெளியிடுகையில்: காலி இலக்கிய விழாவில் முன்பு பங்கேற்ற நான், இலங்கையிலிருந்து வெளிவரும் வளமான இலக்கியக் குரல்களை நீண்ட காலமாகப் போற்றி வருகிறேன். என்றார்.
கிறேஷியன் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களான நஃபீஸா அமிருதீன் மற்றும் நிஸ்றின் ஜெஃபர்ஜி ஆகியோர், இறுதிப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின், நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும், சிரேஷ்ட உதவி துணைத் தலைவருமான கார்மலின் ஜெயசூரிய அறக்கட்டளையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி கருத்து தெரிவிக்கையில்:
நமது தனித்துவமான பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு கொண்டாடுவதற்கும், நமது படைப்பாக்க தொழில் துறைகளின் வியத்தகு திறமையை ஊக்குவிப்பதற்கும் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த சமூகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பகிரப்பட்ட அடிப்படையில் இலக்கியத்தின் மகத்துவத்தைக் கொண்டாடுவதில் கிறேஷியன் அறக்கட்டளையுடன் எமது கூட்டாண்மையைத் தொடர்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்கான, கிறேஷியன் பரிசு மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்புக்கான எச்.ஏ.ஐ. குணதிலக பரிசு ஆகிய இரண்டிற்குமான அறிவிப்பு மற்றும் விருது வழங்கும் வைபவம் 2025 மே 31 அன்று சினமன் லை.ப், சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில்; உள்ள The Studio இல் நடைபெறும்.
கிறேஷியன் பரிசுக்காக, இறுதிப்பட்டியலிடப்பட்ட படைப்புகள் அல்லது எதிர்வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய மேலதிக தகவல் விபரங்களுக்கு, www.gratiaen.com ஐப் பார்வையிடவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM