உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடம் பிரபலமான வீடியோ செயலியான கூகிளுக்கு சொந்தமான யூடியூப் சில பழைய ஐபோன் மொடல் கையடக்கதொலைபேசிகளில் தனது சேவையை நிறுத்தியுள்ளது.
அந்தவகையில் ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் முதலாம் தலைமுறை ஐபோன் SE. ஆகிய கையடக்கதொலைபேசிகளில் யூடியூப் சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மாற்றாக, உங்களிடம் ஐபாட் டச் 7 இருந்தால் அதிலும் யூடியூப் செயற்படாது.
இந்த அறிவிப்பு குறித்து நபரொருவர் 'எனது ஐபோன் 6s மெதுவாக வலுவிழக்கப் போகிறது' என தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 அன்று வெளியிடப்பட்ட பதிப்பு 20.22.1 இல் யூடியூப் அமைதியாக மாற்றத்தைச் செய்தது.
ஆப் ஸ்டோரில், யூடியூப் இந்தப் பதிப்பை 'பிழை திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் அதிகமான பூனை வீடியோக்கள்' கொண்டதாக விவரிக்கிறது.
இருப்பினும், தற்போது ஐபோனில் இயங்க iOS 16.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை எனவும், ஐபாடில் இயங்க iPad 16.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை எனவும் சிறிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, iPad Air 2 மற்றும் iPad mini 4 க்கு இந்த செயலி நிறுத்தப்பட்டுள்ளது.
அதிருப்தியடைந்த பல பயனர்கள் இந்த செய்தியைப் பற்றி எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர் 'இந்த பூமியில் தன்னிடம் ஐபோன் 6S இருப்பது என்ன தவறு' என ஒரு பயனர் கேட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM