“குடு சலிந்து”வின் சகா போதைப்பொருளுடன் கைது

06 Jun, 2025 | 11:04 AM
image

வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிது மல்ஷிக குணரத்ன என்பவரின் சகா போதைப்பொருளுடன் களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை  - ரஜவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதசெய்யப்பட்டவர் பாணந்துறை - அருக்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 50 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

2026-08-18 16:19:02
news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24
news-image

எல் - நினோ காலநிலை தாக்கம்...

2026-08-18 13:36:40
news-image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய மீண்டும்...

2026-08-18 13:08:11
news-image

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால்...

2026-08-18 13:25:29
news-image

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...

2026-08-18 16:12:47