(நா.தனுஜா)
உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில், இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுபற்றி கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில், அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM