முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு!

05 Jun, 2025 | 07:48 PM
image

தேசிய சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளான இன்று (5) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் விசேட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளரின்  தலைமையுரையும் அதனைத் தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் சுற்றுச்சூழல் உறுதிமொழியெடுத்தல் (Environmental Pledge) நிகழ்வும் நடைபெற்றது. 

பின்னர், உலக சுற்றுச்சூழல்  தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் நடைபெற்ற  பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனின் பேச்சு மற்றும்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கல் நிகழ்வும் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து உலக சுற்றுச் சூழல்  தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் நடைபெற்ற சுவரொட்டி ஓவியப் போட்டியில் பங்குபற்றி திறமையை வெளிக்காட்டிய மாணவர்களது சுவரொட்டி ஓவியங்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டது. 

இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) எஸ்.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந்,  பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், பிரதம  கணக்காளர் ரஞ்சித்குமார், திட்டப் பணிப்பாளர் ஜெயரஞ்சினி மற்றும் மாவட்ட செயலக  பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38