குழந்தையின்மைக்காக வழங்கப்படும் சிகிச்சைகளில் 85% சதவீத வெற்றியை முதன்முதலாகச் சாத்தியப் படுத்தி தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் ஆறாவது இடமும் பெற்று முன்னணியில் விளங்குகிறது பிரசாந்த் மருத்துவமனை. இலங்கையில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற் பட்ட குழந்தைகள், டொக்டர் கீதா ஹரிப்ரியாவின் துல்லியமான நோயறிதல் செயற்பாடுகளாலும், சிறந்த சிகிச்சைகளாலும் பிறந்துள்ளன. இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் நடைபெறுகிற ஸ்மார்ட் இந்தியா எக்ஸ்போவில் பங்குபற்றவிருக்கும் டொக்டர் கீதா ஹரிப்ரியா, அது குறித்த தகவல்களை நம்முடன் பகிரும்போதே மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“எம்மிடம் வரும் ஒவ்வொரு தம்பதியரையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள இலங்கை மக்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். முதலில், கணவன்-–மனைவி இரு வரது குடும்ப மற்றும் மருத்துவப் பின்னணிகளை முழுமையாகக் கேட்டறிகிறோம். இதன்போது, கருத்தரிப்புக்கு உகந்த காலத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் இணையாமல் இருப்பதைக் கண்டறிகிறோம். அதைச் சரிசெய்வதற்கான ஆலோசனை வழங்கி விட்டால் அவர்கள் இயற்கையாகவே கருத்தரித்து குழந்தை பாக்கியம் பெற்றுவிடுகிறார்கள்.

“தம்பதியருக்கு எவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்கு சில பரிசோதனைகள் அவசியமாகின்றன. அவற்றில் ‘ஹிஸ்டோசல்பிங்கோகிராம்’ முக்கியமானது. இது கருக்குழாய்களை எக்ஸ்ரே கருவியைப் போல் அணுகி ஆராய்கிறது. கருக்குழாய்களின் தன்மை, அவற்றில் ஏதேனும் அடைப்புகள் இருக்கின்றனவா என்பனவற்றைத் துல்லியமாக ஆராய இது உதவுகிறது. இதுபோலப் பல பரிசோதனைகள் மூலம் பெண்ணின் இனப் பெருக்க ஆரோக்கியத்தை முழுமையாக ஆராய் கிறோம்.

“ஆண்களைப் பொறுத்தவரையில், அவர்களது உயிரணுக் கள் நுணுக்கமாக ஆராயப்படுகின்றன. கணினி மூலம் பல்லாயிரம் மடங்கு பெரிதுபடுத்தி ஆராய முடிவதால், உயிரணுக்களின் எண்ணிக்கை, அவற் றின் நீந்தும் திறன் என்பனவற்றைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. மேலும்,  ‘ஸ்கோர்ட்டல் டொப்ளர்’ என்ற பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதில், விந்தணு உற்பத்தியாகும் விரைப்பைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் ஆராயப்படுகிறது.

“தம்பதியருக்குச் செய்யப்படும் முழுமையான இரத்தப் பரிசோதனையும் முக்கியமானதே! இதில், பெண்ணின் உடலினுள் உள்ள சில சுரப்பிகளின் கோளாறுகள் கண்டறியப்பட வாய்ப்புள் ளது. அப்படிக் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு மாத்திரைகளோ, ஊசி மருந்துகளோ இட்டாலே போதும், இயற்கையாகவே குழந்தை பிறக்க வாய்ப்புகள் உண்டாகிவிடும். 

“உதாரணமாக, ‘தைரொய்ட்’ சுரப்பியின் குளறுபடி கூட குழந்தை யின்மைக்கு வழிவகுக்கும். இவ்வாறா னவர்களுக்கு அதைச் சீர்செய்யக்கூடிய மருந்துகளை வழங்கிவிட்டாலே போதும், இயற்கையாகவே அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

“அதுபோலவே ‘புரோலாக்டின்’ என்ற சுரப்பி, கருமுட்டை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. இதனால் வாடும் பெண்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கி, அதன்மூலம் புரோலாக்டின் சுரப்பியைச் சீர் செய்துவிட்டாலே அவர் களது குழந்தையின்மைப் பிரச்சினை தீர்ந்துவிடும். ஒருவேளை புரோலாக்டினின் அளவு மிக அதிகமாக இருந்தால் மட்டும் ‘எம்.ஆர்.ஐ.’ ஸ்கேனர் மூலம் அதன் இயக்கத்தைச் சீர்செய்துவிட வேண்டியிருக்கும்.

“ஹிஸ்ட்ரோஸ்கோப்பி, லாபரோஸ் கோப்பி போன்ற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் உதவியுடன் கர்ப்பப்பையின் அளவு, வடிவம், அதன் தளர்வுத் தன்மை என்பவற்றை ஆராய முடிவதோடு மட்டுமன்றி, மிக மிக இலகுவாக அவற்றைச் சரிசெய்துவிட முடிகிறது. இதனால்தான் முதற்கட்ட பரிசோதனைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“எனவே, குழந்தையின்மையால் வாடுவோர் எவ்வயதைச் சேர்ந்தவர் களாயினும், அதிநவீன உபகரணங்கள் மூலமான முதற்கட்ட பரிசோதனைகளை முழுமையாகச் செய்துகொள்வது அவசியம். இதனால், செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சைகள் தேவையா, இல்லையா, ஒருவேளை தேவையென்றால் எந்த சிகிச்சை இவர்களுக்கு உகந்தது என்று தெளிவாகக் கண்டறிந்து விட முடிகிறது.  

 “பரிசோதனைக்குப் பின், ஒருவேளை செயன்முறை சிகிச்சைகளைச் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் பட்சத்தில், தம்பதியருக்கு ஒரு சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. செயன் முறைச் சிகிச்சைகளின் பண்புகள், அதற்கான காலம், செலவு என்பன உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தம்பதியர்களுக்கு எடுத்துச் சொல்லப் படுகின்றன. இதன்மூலம், தமக்கு வழங்கப்படவிருக்கும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் படிமுறைகள், ஒவ்வொரு படிமுறையிலும் என்னென்ன செய்யப்படுகிறது என்பது குறித்து அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

“என்னிடம் சிகிச்சை பெறும், சிகிச்சை பெற விரும்பும் இலங்கைத் தம்பதியருக்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். சில மாதங்களுக்கு முன் என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு சிங்களத் தம்பதியர், தாமறிந்த ஏனைய நோயாளிகளுக்குச் செய்யப்பட்ட சில உப சிகிச்சைகள் தமக்குச் செய்யப்படவில்லை என்று வருந்தினார்கள். இதுபோலவே இன்னும் பலர் நினைக்கலாம். அவர் களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லோருக்கும் பிரச்சினை ஒன்றுபோலவே இருக்காது. சிலருக்கு சில சிகிச்சைகள் தேவைப் படலாம்; சிலருக்குத் தேவைப்படாது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு நோயாளிக்குமான சிகிச்சைக் கட்டணங்களில் ஏற்றத் தாழ்வு இருக்கும். அதையெண்ணி யாரும் குழப்பம் கொள்ளலாகாது. அவரவர் பிரச்சி னைக்குத் தகுந்தபடிதான் சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதையும், சிகிச்சை களுக்கு ஏற்பவே கட்டணங்களும் மாறும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், குறித்த அந்தச் சிங்களத் தம்பதியருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்கப்போகிறது என்பதுதான்!

“இதுபோலவே, உங்களிடம் காணப்படும் மகப்பேற்றுக் குறைபாடு களை என்னிடம் கூறுங்கள். அதற்குப் பொருத்தமான சிகிச்சைகளை வழங்கி, அந்தக் குறைபாடுகளை நீக்கி நீங்களும் தாயாக, தந்தையாக மாறுவதற்கு உதவ நான் தயார்!” “எதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் கொழும்பில் நடைபெறும் கண்காட்சியொன்றில் பங்குபற்றவிருக்கிறேன். உங்கள் குழந்தையின்மைப் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் உங் களிடம் இருக்கலாம். அவற்றை நேரடியாக என்னிடமே அதுவும் இலவசமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவிரும்பு கிறீர்கள் என்றால், 075 4000012 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கும் நிச்சயம் குழந்தைப் பேறு உண்டு. அதில் சந்தே கமே வேண்டாம்!” என்றார்.