அபிலாஷனி லெட்சுமன்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் மக்களுடன் ஒன்றித்து, உண்மைத்தன்மையுடன், பிற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படாமல், மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை ( 05) தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் , பிற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர் பதவி பறிக்கபடும் என்பதை நினைவில் வைத்து எதிர்காலத்தில் மக்களுடன் ஒன்றித்து, உண்மைத்தன்மையுடன் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டாலும் கூட சபைகள் அமைப்பதில் சிக்கல் காணப்படுகின்னறது. இது தொடர்பாக உள்ளூராட்சி சபை தேர்தல் நடந்து முடிந்த அடுத்த நாள் இது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க என்னிடம் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடினார்.
இதன்போது அவர் குறிப்பிட்டார் சபைகளில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு நான் கூறினேன் நல்ல விடயம் தான் சட்டத்தில் அவ்வாறு இடமளிக்கவில்லை என்று. எந்த கட்சியாக இருப்பினும் 50 வீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்றிருந்தால் மாத்திரமே சட்டமன்றம் அமைத்து ஆட்சி அமைக்க முடியும் என்றேன்.
எதிர்கட்சிகளுக்கு அதிகளவான வாக்குகள் பெறாத சபைகளில் பல கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க முயல்கின்றன. அதே போல் ஆளும்கட்சியும் கூட கடந்த காலங்களில் புறக்கணித்திருந்த சுயேட்சைக்குழுக்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனித்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், மாத்தறை மாவட்டங்களில் களமிறங்க உத்தேசம் உள்ளது.
40 % வேட்பாளர்களை, 35 வயதுக்கு குறைந்தவர்களாக களமிறக்க எதிர்பார்த்துள்ளதோடு, 25 % வேட்பாளர்களை பெண்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளளோம்.
எமது தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளில் இருந்து கொள்கை முரண்பாடு காரணமாக பிரிந்து சென்ற உறுப்பினர்களுக்கு , எமது கட்சிக்கு திரும்புமாறு பகிரங்க அழைப்பு விடுத்து,மாற்று தமிழ் தேசிய கட்சிகளுடன் உடன்பாடு காண வேண்டும்.
உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்தை திருத்த, அன்று தெரிவு குழுவில் எதிர்கட்சிகளாக தேசிய மக்கள் சக்தி , தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய நாம் அனைவரும் ஏகமனதாக கண்ட உடன்பாட்டை, பெரும்பான்மை மிக்க ஆளும் கட்சியான பிறகும் நிறைவேற்ற தவறிய ஆளும் கட்சியே இன்றைய சபை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
நாட்டுக்கும், இந்திய பிரதமருக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய ஜனாதிபதி அநுர மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும்.
”கள்ளர்களை பிடித்து உள்ளே போடும்" அரசின் கொள்கைக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கும், அதேவேளை இது மட்டுமே அரசாட்சி அல்ல, இன்று நாட்டில் பொருளாதார மேம்பாட்டை காணவில்லை என அரசுக்கு நாம் கடுமையாக சுட்டி காட்டுகின்றோம்.
மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாண பெருந்தோட்ட பிரதேசங்களில், 10 -பேர்ச் காணி உரிமை, தனி வீட்டு உரிமை, கல்வி உரிமை, மேலதிக பிரதேச சபை, மேலதிக பிரதேச செயலகங்கள், தோட்டப்புற-கிராமபுற வித்தியாசங்களை களைந்திடும், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆரம்பித்த எமது "சிஸ்டம் சேஞ்ச்" பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? என நாம் ஜனாதிபதி அனுர அரசுக்கு சவால் விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM