எம்முடைய ஜாதகத்தில் திசா, புத்தி எதிர்மறையாக இருந்தாலும் குருவின் அருள் அதாவது குரு பகவானின் பார்வை பரிபூரணமாக கிடைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குருவின் ஆசி இருந்தால் தான் எந்த காரியத்தையும் திட்டமிட்டு அதில் வெற்றி பெற இயலும். குரு பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு குருவின் பரிபூரண அருள் கிடைப்பதில் தடையும், தாமதமும் உண்டாகி இருக்கும். இவர்கள் குருவின் அருளை பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள், தண்ணீர், கொண்டைக்கடலை.
உங்களது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் வாழைமரம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது உங்களது வீட்டின் பின்புறத்தில் தோட்டம் இருந்தால் அதில் வாழை மரத்தை பதியமிடுங்கள்.
இந்த வாழை மரத்திற்கு வியாழக்கிழமைகளில் மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரையிலான குரு ஹோரையில் மஞ்சள் தூள், கொண்டைக்கடலை, தண்ணீர், ஆகியவற்றை கலந்து அதன் அடிப்பகுதியில் ஊற்றுங்கள்.
அந்தத் தருணத்தில் வாழை மரத்திடம் உங்களது கோரிக்கையை சமர்ப்பித்து பிரார்த்திக்க வேண்டும். வாழைமரம் மற்றும் வாழைப்பழம் குருவின் அம்சம் என்பதால் அதற்கு நீங்கள் வியாழக்கிழமை தோறும் மேலே விவரிக்கப்பட்ட வகையில் தண்ணீர் ஊற்றி வந்தால் உங்களது கோரிக்கையை இந்த பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கான சுப பலனை வழங்கும்.
குறிப்பாக குருவின் அருளை பெறலாம். இதன் பிறகு நீங்கள் திட்டமிடும் காரியங்களில் வெற்றி கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM