விஜய் ரிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் புகழ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ' ஜூ கீப்பர் ' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான ஜே. சுரேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ' ஜூ கீப்பர் ' எனும் திரைப்படத்தில் புகழ் , ஷிரீன் காஞ்ச்வாலா, சிங்கம் புலி, விஜய் சேயோன், மறைந்த நடிகர் மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, பிரமீட் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தன்வீர் மொஹிதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பணியாற்றும் சாகச மிக்க காவலரின் வாழ்வியலை விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ராஜரத்தினம் மற்றும் ஏ. ஆரோக்கியதாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் கதையின் நாயகனாக உயர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இந்த தருணத்தில் நகைச்சுவை நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் புகழ், கதையின் நாயகனாக நடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கும் ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM