சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றும் 'ஆர் எம் வி -தி கிங் மேக்கர்' முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

05 Jun, 2025 | 04:43 PM
image

இன்றும் மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் 'புரட்சித் தலைவர்' எம்ஜிஆருடன் இணைந்து அறியப்படும் ஆளுமைகளில் ஒருவரான இராம. வீரப்பன் குறித்த சுயசரிதையாக உருவாகும் 'ஆர் எம் வி - தி கிங் மேக்கர்' எனும் ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் இந்த ஆவண திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ் ,சரத்குமார், ஆகிய முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் தோன்றி ஆர். எம். வீரப்பனை பற்றி தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல், ஆன்மிகம், இலக்கியம், உள்ளிட்ட பல துறைகளிலும் உள்ள ஆளுமைகள் அருளாளர் இராம. வீரப்பனை பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த முன்னோட்டம் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் பிரத்யேக வலையொளியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்போது இணையவாசிகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்