வத்தளை - மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
மஹாபாகே, கெரகஹபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 40 வயதுடைய சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனின் மகன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ள நிலையில், கடனை திருப்பி தராததால் சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சந்தேக நபர், குறித்த பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி அதனை அடகு வைத்து பணத்தை பெற்று, புத்தளம் பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
தங்க நகைகளை திருடி அடகு வைத்து பெற்ற பணத்தை தனது மனைவியின் வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரின் மனைவியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM