களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய அரசு செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள மகப்பேறியல் மற்றும் பெண்யோயியல் குறைந்த செலவில் அரசின் உதவியுடன் இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (In Vitro Fertilization)சிகிச்சையை வழங்கி வருகிறது.
குறைந்த செலவில் சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய, அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் முதலாவது கருத்தரித்தல் சிகிச்சை மையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற வெற்றிகரமான சிகிச்சையின் பயனாக, தற்போது 28 வார கர்ப்பமாக இருப்பதை ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கணவருடன் திருமணம் ஆன பிறகு எட்டாண்டுகள் குழந்தை பெற முடியவில்லை. பல சிகிச்சைகள் எடுத்தேன். ஆனால் 10 லட்சம் ரூபா செலவழிக்க முடியவில்லை. மாற்று வழி இல்லாததால் இந்த சிகிச்சை பெற முடிவு செய்தேன். சிகிச்சை ஆரம்பித்ததும் எல்லாவற்றையும் இலவசமாக பெற்றேன். இப்போது 28 வார கர்ப்பமாக உள்ளேன்,” என்றார் அவர்.
இது தொடர்பில், ராகம மருத்துவப்பீட்டின் சிறப்பு வைத்தியர் திரண் தியாகம் கூறுகையில்,
“இந்த சிகிச்சை ஒரு முன்னணி திட்டமாக நடத்தப்பட்டது. நாங்கள் இதனை சுயமாக நடத்த முடியுமா என்று பார்க்கவேண்டும் என நினைத்தோம். அது வெற்றிகரமாக முடிந்தது. இப்போது இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக வழங்குவதற்கும், நோயாளிகளின் தேர்விற்கும் சுகாதார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM