காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா

Published By: Rajeeban

05 Jun, 2025 | 11:16 AM
image

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும்.

யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும்,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன.

இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேசில் தலைநகரில் ஹெலிகொப்டர் விபத்து: 4...

2026-08-09 12:21:37
news-image

ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமெனி:...

2026-08-09 11:45:03
news-image

தாய்லாந்து பாடசாலைத் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின்...

2026-08-09 09:36:18
news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26