bestweb

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது ஏன்? - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

04 Jun, 2025 | 06:47 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் கூறிய எதுவும் செல்லுபடியாகவில்லை. எவ்வாறிருப்பினும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கமைய எதிர்வரும் 16ஆம் திகதி இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அரசாங்கம் கூறியது எதுவும் இங்கு செல்லுபடியாகவில்லை.

50 சதவீதம் அல்லது அதற்கும் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சபைகளில் வாக்கெடுப்பின் மூலமாகவே பதவிகளுக்கான நியமனங்கள் தெரிவு இடம்பெறும் என்பதையே நாம் ஆரம்பத்திலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றோம்.

கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக ரீதியாக ஆட்சியமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகிறது. அதற்கமைய எமது வேட்பாளரை மேயராக நியமிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

எவ்வாறிருப்பினும் சதித்திட்டங்கள் மூலம் இந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி மீண்டும் சில குழுக்களை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எவ்வாறிருப்பினும் இது 16ஆம் திகதி வரை எதற்காக காலம் தாழ்த்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் பெரும்பான்மை அற்ற சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஒரு வாரம் மாத்திரமே கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் எதற்காக 16ஆம் திகதி வரை காலம் நீடிப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்குள்ளும் அரசியல் தலையீடு காணப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

மேயர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், பிரதி மேயர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலும் நியமிக்கப்படுவர். அரசாங்கம் ஏனைய விடயங்களில் செயற்படுவதைப் போன்று முகநூல் ஊடாக இந்த பதவிகளுக்கான நியமனங்களை வழங்க முடியாது. அதேபோன்று ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று சட்ட விரோதமாக செயற்படவும் முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து...

2025-07-11 20:34:31
news-image

30 சதவீத வரி வீதத்தை குறைக்க...

2025-07-11 16:11:53
news-image

மக்கள் நலன் நோக்கிய செயற்பாடுகளுக்காக அரசியல்...

2025-07-11 20:27:05
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-07-11 19:05:39
news-image

கொஸ்கொட சந்தியல் துப்பாக்கிச் சூடு; ஒருவர்...

2025-07-11 19:31:16
news-image

பிரிக்ஸில் இணைவதற்கு முழுமையான ஆதரவு ;...

2025-07-11 19:00:23
news-image

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய  ஒரு தேசமாக...

2025-07-11 19:20:43
news-image

கூட்டுறவுத்துறையில் அரசின் கட்டுப்பாடுகள் 13ஆவது திருத்தத்தை...

2025-07-11 16:41:09
news-image

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு...

2025-07-11 18:55:40
news-image

வெண்மையாக்கும் களிம்பு பாவனை சருமநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை...

2025-07-11 18:24:32
news-image

ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்...

2025-07-11 17:35:29
news-image

ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள்...

2025-07-11 17:40:03