பிரிந்த தம்பதியர் ஒன்றிணைய பிரத்யேக வழிபாடு

04 Jun, 2025 | 06:08 PM
image

காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்ட தம்பதிகளும்  இல்லறம் குறித்த தங்களின் எதிர்பார்ப்பு பொய்யாகும் போது அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. புரிதலின்மை, விட்டு கொடுக்கும் குணம் இன்மை, பொறுமையின்மை என பல்வேறு காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள்.

உறவினர்கள் - நண்பர்கள் - சுற்றத்தார் - அக்கம் பக்கத்தினர்- சமூக வலைதள நட்பு- என பலரும் இவர்களுக்கான ஆதரவை நிரந்தரமாக ஆயுள் முழுவதும் வழங்க இயலாது.

அதே தருணத்தில் தம்பதிகள் தங்களுக்குள் ஏற்பட்ட விரிசல் குறித்த சுய பரிசோதனையை காலத்தின் கட்டாயத்தால் மேற்கோள்ள தொடங்கி இருப்பார்கள். மேலும் விவாகரத்து பெறுவதற்கான நீதிமன்ற நடைமுறையும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

இந்த தருணத்தில் தம்பதிகள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணத் தொடங்குவர். இந்நிலையில் இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இவர்களுக்கான பிரத்யேக வழிபாட்டையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

புதன்கிழமையும், அஷ்டமி திதியும் இணைந்து வரும் நாளில் உங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள ஆலய வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு நாகங்கள் இணைந்திருக்கும் சிலைக்கு ( ராகு - கேது) வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்திலான அரளி பூ மாலையை சாற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவில் அறிமுகமான அல்லது அறிமுகமற்ற நபர்கள் மூலம் உதவி கிடைக்கப் பெற்று தம்பதிகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

உடனே எம்மில் சிலர் அஷ்டமி திதி வளர்பிறையா..தேய்பிறையா? என சந்தேகம் கேட்பர். வளர் பிறை / தேய் பிறை என இரண்டு அஷ்டமி திதியிலும் மேலே விவரிக்கப்பட்ட வழிபாட்டை மேற்கொள்ளலாம். பலன் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிபாடு..!?

2025-06-21 17:50:27
news-image

வெற்றிகளை குவிக்கும் பிரத்யேக தீப வழிபாடு..!?

2025-06-21 01:44:51
news-image

இலாபத்தை அள்ளித்தரும் பிரத்யேக ஆற்றல் மிக்க...

2025-06-19 17:23:13
news-image

உங்களது மனை சைவமா? அசைவமா?

2025-06-18 16:59:13
news-image

செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2025-06-17 16:33:00
news-image

பித்ரு தோஷம் விலகுவதற்கான எளிய பரிகாரம்

2025-06-16 18:31:53
news-image

தனவந்தராக உயர்வதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-06-13 18:20:20
news-image

திசா நாதனின் பரிபூரண அருளை பெறுவதற்கான...

2025-06-12 17:09:02
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் மந்திர உச்சாடன...

2025-06-10 19:07:59
news-image

தடை, தாமதம் போன்ற பாதிப்புகளை நீக்குவதற்கான...

2025-06-12 22:03:04
news-image

ஆரோக்கியம் மேம்பாடு அடைவதற்கான பிரத்யேக தீப...

2025-06-07 20:35:40
news-image

கேட்ட வரத்தை அருளும் அரசமர வழிபாடு

2025-06-06 18:23:16