இலங்கையின் அற்புதமான நகரான இரத்தினபுரியில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேஸ்வரர் ஆலயமானது, நூற்றாண்டுகளாக இறைவன் சிவபெருமான் மீது பக்தி செலுத்தும் இடமாக விளங்குகிறது.
இந்த ஆலயம், பழமை, பண்பாடு மற்றும் பக்தி ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் ஆன்மிக மையமாக உள்ளதோடு விபீஷணன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமாகவும் போற்றப்படுகின்றது.
தென்னிந்திய ஸ்தபதியர் பாரம்பரியத்துடன் கூடிய வடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் இரத்தினேஸ்வரர் (ஸ்ரீ பரமேஸ்வரன்) மூலவராகவும் திரிபுரசுந்தரி அம்பாள் உபதேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை எண்ணெய் காப்பு இடம்பெறவுள்ளதோடு, இரத்தின சபேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.26 மணி வரை இடம்பெறவுள்ளது.
இரத்தினேஸ்வரம் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரத்தின பூமிக்கான புனித தீர்த்த யாத்திரையானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள், இலங்கையிலுள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் இருந்து பெறப்பட்ட தீர்த்தங்கள் மற்றும் கலசங்கள் ஆகியன விசேட பூஜை வழிபாடுகளுடன் தலைநகர் கொழும்பிலுள்ள பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரும் பக்த அடியார்களும் இந்த தீர்த்த யாத்திரைக்கான பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர்.
குறிப்பாக, கொழும்பு 06 - மயூரபதி அம்மன் கோயில் ,கொழும்பு 11 - ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் , கொழும்பு 11 முத்துவிநாயகர் கோயில், கொழும்பு 11- புதிய கதிரேசன் கோயில் , கொழும்பு 11 - பழைய கதிரேசன் கோயில் , கொழும்பு 11- சின்ன காளியம்மன் கோயில் , கொழும்பு 11- பெரிய காளியம்மன் கோயில் , கொழும்பு 11- சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி கோயில், அவிசாவளை - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் , - எஹலியகொட - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் , இரத்தினபுரி - ஸ்ரீ மகா காளியம்மன் கோயில், இரத்தினபுரி - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் , இரத்தினபுரி - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் போன்ற புனித ஸ்தலங்களின் ஊடாக புனித தீர்த்தயாத்திரை ஊர்வலமாக சென்று 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரத்தினபுரி நகர்,ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேஸ்வரர் திருகோயிலை சென்றடையவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM