காற்று மாசு மற்றும் சுற்றுப்புற சூழலியல் மாசு காரணமாக ஓஸ்துமா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இதற்காக இன்ஹேலர் எனும் சாதனங்கள் மூலம் நிவாரண சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
இத்தகைய சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ளும் போது நோயாளிகளில் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும், சிலருக்கு குருதி அழுத்தத்தில் சீரற்றத்தன்மை ஏற்படுவதாகவும் வைத்தியர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
பொதுவாக ஓஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் சீராக இயங்குவதற்கு இன்ஹேலர் எனும் சாதனம் மூலம் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பாவிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம்.
இத்தகைய தருணங்களில் பிராங்கோஸ்பாசம் எனப்படும் நுரையீரல் பகுதியில் ஏற்படும் பாதிப்பை சீராக்குவதற்காக வழங்கப்படும் மருந்துகள் சிலருக்கு முழுமையான நிவாரணத்தை அளிப்பதுடன் இதய துடிப்பையும் அதிகப்படுத்துகிறது.
இதன் காரணமாக ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் இவை வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பக்க விளைவு ஏற்படக்கூடும்.
இவர்களும் வைத்தியர்களின் பரிந்துரையை முழுமையாக கடைப்பிடித்தால்..இதிலிருந்தும் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக இவர்கள் வாய் வழியாக இன்ஹேலரை பாவித்த பிறகு தண்ணீரால் வாயை கொப்பளிக்க வேண்டும் என்ற வைத்தியரின் பரிந்துரையையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
வைத்தியர் சபரிநாத் தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM