அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House - 32 வருட சாதனையை கொண்டாடுகிறது

04 Jun, 2025 | 06:10 PM
image

அசல் தாய்லாந்து உணவுகளை வழங்கும் முன்னோடி உணவகமான சியாம் ஹவுஸ் (Siam House), அதன் 32 வருட பூர்த்தியை மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது.

இந்த மூன்று தசாப்த கால பயணமானது, தாய்லாந்தின் சுவைகளை உள்ளூர் வாடிக்கையாளர்களிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு சேர்ப்பதில் சியாம் ஹவுஸ் காண்பித்த அர்ப்பணிப்பு மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் தனித்துவமான தரத்தின் வெளிப்பாடாகும்.

கொழும்பில் தாய்லாந்து உணவுகளை அறிமுகப்படுத்திய முதன்மையான உணவகங்களில் ஒன்றான சியாம் ஹவுஸ், தாய்லாந்தின் பாரம்பரிய சமையல் முறைகளை கடைப்பிடிக்கும் உணவகமாக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு சிறிய ஆரம்பத்திலிருந்து தொடங்கி இன்று மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்த உணவகமாக மாறியுள்ள சியாம் ஹவுஸ், பாரம்பரிய தாய் சமையல் முறைகளை சுவை மாறாமல் அவ்வாறே வழங்கி வருகிறது. ஒவ்வொரு உணவும் அனுபவமுள்ள தாய்லாந்து சமையல்கலை நிபுணர்களால், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்ட சமையல் முறைகளின்படி தயாரிக்கப்படுகிறது.

இங்கு அவர்களால் தயாரிக்கப்படும் கறி மசாலாக்கள் யாவும் உயர்தர மூலப்பொருட்களில் இருந்து நேரடியாக தயாரிக்கப்படுவதால், உணவின் ஒவ்வொரு சுவையும் வாசனையும் தாய்லாந்தின் அசல் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

அசல் உணவுத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, இதில் பயன்படுத்தப்படும் முக்கியமான சில மூலப்பொருட்கள், குறிப்பாக Pad Thai noodles, rice vermicelli, bean vermicelli, fragrant jasmine rice  ஆகியன நேரடியாக தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசேட அணுகுமுறையே வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் உயர்தரத் தரத்தையும் உணவு அனுபவத்தையும் பராமரிக்க உதவுகிறது.

தனது விசேடத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில், தாய்லாந்து வர்த்தக அமைச்சினால் வழங்கப்படும் உயரிய விருதான Thai Select Signature சான்றிதழை சியாம் ஹவுஸ் பெற்றுள்ளது. இது தாய்லாந்துக்கு வெளியே உள்ள தாய் உணவகங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும், இலங்கை சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகாரசபையால் A தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையானது, ஒரு உயர்மட்ட உணவகமாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இது பற்றி சியாம் ஹவுஸ் தலைவர் லயனல் பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்: “32 வருட பூர்த்தியை கொண்டாடும் இந்த சிறப்பான தருணத்தில், நாம் எமது அசல் தாய் உணவு பாரம்பரியத்தை பாதுகாத்து பேணி, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்குவதே எமது நோக்கமாகவும், இலட்சியமாகவும் காணப்படுகின்றது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த மைல்கல்லானது, எமது குழுவின் அர்ப்பணிப்பு, சமையல் கலைஞர்களின் உற்சாகம் மற்றும் எம்முடன் நீண்ட காலமாக பயணித்த ஆதரவாளர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.” என்றார்.

சியாம் ஹவுஸ் தற்போது இல. 16, மெல்பேர்ன் அவனியூ, கொழும்பு 04 (முந்தைய முகவரி: இல. 17), இல. 98, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 07 ஆகிய இரண்டு இடங்களில் இயங்கி வருகின்றது. அனைத்து தாய் உணவுப் பிரியர்களிடையிலும் விருப்பத்திற்குரிய இடமாக சியாம் ஹவுஸ் தொடர்ச்சியாக விளங்கி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44