bestweb

ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப் ‘பாடசாலைச் சூழலைப்பாதுகாப்போம் ‘

04 Jun, 2025 | 04:45 PM
image

இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் பரந்த ஆயுள் காப்புறுதியாளரான ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப் தனது நிறுவனம்சார் சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பாடசாலைச் சூழலைப் பாதுகாப்போம்' 2025 நிகழ்ச்சித்திட்டம் மூலம்  2025 மே மாதம் 24 ஆம் திகதி  தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்ற 100 பின்தங்கிய பாடசாலைகளுக்கு அதன் பங்களிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலைக் குழந்தைளுக்கு  தங்களது கல்வி நடவடிக்கைகளில் வெற்றி பெறுவதற்குரிய உகந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். வணிக நோக்கங்களுக்கு அப்பால் சென்று  நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள குழந்தைகளுக்காக தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 

தீவு முழுவதும் 100 பாடசாலைகள். 

2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இதுவரை 3,365 பாடசாலைகள்  பயன் அடைந்துள்ளன. ஒரே தினத்தினுள் தீவு முழுவதும் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டதோடு ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் இன் வலய, பிராந்திய மற்றும் கிளை முகாமைத்துவம் உள்ளிட்ட விற்பனைப் படையணியும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கின.

இந்த விசேட நிகழச்சித்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா காப்புறுதி நிறுவனத்தின் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர்  சந்தன எல். அலுத்கம  அவர்கள் உட்பட நிறுவனத்தின்  முகாமைத்துவ அலுவலர்கள் தீவு முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்துகொண்டனர்.

'பாடசாலைச் சூழலைப் பாதுகாப்போம்'  கருத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு அவற்றில் முக்கியமான  நிகழ்ச்சித்திட்டங்களாக, வகுப்பறைகளைப் புனரமைத்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல், வர்ணம் தீட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகள், மேசைகள் மற்றும் கதிரைகளைப் பழுதுபார்த்தல் மற்றும் மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலை நூலகங்களுக்கும் புத்தகங்களை நன்கொடையாக வழங்குதல் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

இதன் மூலம் இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு சிறப்பான கல்வியை வழங்குவதற்காக  அவர்களின் பாடசாலைகளில் சிறப்பானதோர் சூழலைப் பேணி வருவதோடு அவர்களின் உள மற்றும் உடல் நலன்களை விருத்தி செய்வதன் மூலம் சிறப்பான கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right