ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹியங்கனையின் தொடம்வத்தை மற்றும் சொரபொர பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடம்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் 5700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 4370 ரூபா பணத்தொகை மற்றும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 2750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, மற்றுமொருசந்தேக நபர் சொரபொர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடம் 3750 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி வசந்த கண்டேவத்தவின் ஆலோசனையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி. டபிள்யூ.டபிள்யூ.விஜேரத்ன தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர்களை மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM