அவுஸ்திரேலிய துணை பிரதமர் - பிரதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

Published By: Vishnu

03 Jun, 2025 | 07:36 PM
image

(எம்.மனோசித்ரா)

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (3) இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்சும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது  கவனம் செலுத்தப்பட்டது. தற்போதுள்ள கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல், பிராந்திய  மற்றும் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது.

மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இலங்கையின் மூலோபாய பங்கை அமைச்சர் மார்ல்ஸ் பாராட்டியதுடன், இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதில் அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் சுமுகமான பாதுகாப்பு உறவுகளை பிரதி அமைச்சர் ஜயசேகர எடுத்துக்காட்டியதுடன் நிலையான ஈடுபாடு மற்றும் பரஸ்பர ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், 2022 முதல் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படைக்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருள் மானியம் உட்பட அவுஸ்திரேலிய அரசாங்கத்தின்  உதவிகளுக்கு  நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன இயந்திரங்களை வழங்கியமைக்கு  பிரதி  அமைச்சர் ஜயசேகர நன்றி தெரிவித்தார், இவை இச்சேவைகளின் கண்காணிப்பு திறன்களை கணிசமாக அதிகரிக்கும் . இந்து - பசுபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உரையாடல் மூலம் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20