மேஷம்
வைராக்கியமும் மனவலிமையும் கொண்ட மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வையிடுவது உங்களின் தொழிலில் சீரான முன்னேற்றம் உண்டாகும். மூன்றாமிட குரு முயற்சிகளுக்கு உறுதுணையாக செயல்படுவார்.
தனஸ்தானத்தில் சூரியனுடன், புதன் இணைவு பெறுவதால் தேவைகளுக்கு பணவரவு வரும். கேட்ட இடத்தில் பணம் வந்து சேரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ஸ்தானதிபதி சனி மூன்றாம் பார்வைகளாக ராசியை பார்ப்பதால் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய கடுமையாக உழைப்பீர்கள்.
ராசியில் தனஸ்தானாதிபதி அமர்வது சிலருக்கு தடைபட்ட திருமணம் சிறப்பாக நடக்கும். மறுமணம் செய்திட விரும்பும் அன்பர்களுக்கு விரைவில் நினைத்தபடி திருமணம் நடக்கும். குடும்ப வழக்குகளில் பல வருடமாக நடக்கும் வழக்கு சுமூகமாக தீர்வாகும். சந்திரன் ஆட்சி பெற்று செவ்வாயுடன் இணைவு பெறுவது நீசபங்க ராஜயோக பலனைத் தரும். எதிர்பாராத நற்பலன்களை பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். கட்டிட வல்லுநர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்பு அமையும். சகோதர வழியில் நினைத்த நடக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, கிழக்கு, வடமேற்கு,
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 09-06-2025 திங்கள் காலை 10.09 முதல் 11-06-2025 புதன் இரவு 08.56 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 06.00 - 07.30 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றி அவல், பொரி கடலை, வெல்லம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் தடையின்றி நடக்கும்.
ரிஷபம்
நினைத்த காரியத்தை நினைத்தவுடன் செய்ய நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு தனஸ்தானத்தில் அமர்வதும் தனஸ்தானாதிபதி புதன் ராசியில் அமர்வதும் தொழில் ஸ்தானாதிபதியும் யோகாதிபதி சனியுடன் ராகு இணைவு பெறுவது குரு பார்வை பெறுவதால் சிறப்பான தொழில் வாய்ப்பை பெறுவீர்கள்.
ராசிநாதன் பனிரெண்டாமிடத்தில் அமர்ந்து ஆறாமிடத்தை பார்வை இடுவதால் நீண்ட நாள் கடன் முடிவுக்கு வரும். வரவேண்டிய இடத்தில் பொருளோ, பணமோ வந்து சேரும். தொலைந்த பொருள் மீட்ட வாய்ப்புகள் அமையும். ராசியில் தனாதிபதி புதனுடன் சூரியன் இணைவு பெறுவதால் மனவலிமையுடன் எந்த செயலையும் செய்து நன்மை பெறுவீர்கள்.
மூன்றாமிடத்தில் சந்திரனுடன் செவ்வாய் சேர்வது வெளிநாடு செல்வது வெளிநாட்டு தொடர்புகளால் உங்களின் முயற்சிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த தொடர்புகள் உருவாகும். நினைத்தபடி காரியம் செய்ய சிலருக்கு சிறு தடை வந்தாலும் அதற்கு தகுந்தபடி உங்களுக்கு நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு அலைச்சல் இருக்கும். பெரும் பகுதி இரவு நேர நிகழ்ச்சிகள் அதிகரிக்கும் அரசியலிலும், பொது வாழ்விலும் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். காரியத்தில் கண்ணாக இருந்து உங்களின் சகல காரியங்களையும் தெளிவு படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் சுபகாரியம் இனிதே நடக்கும் தேவைகளுக்கு உங்களுக்கு பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 11-06-2025 புதன் இரவு 08.57 முதல் 14-06-2025 சனி அதிகாலை 05.47 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: நவகிரகங்களுக்கு சனிக்கிழமையன்று ஏழு விளக்கு போட்டு மிளகு பொங்கல் நைவேத்தியம் வைத்து தானம் செய்து வேண்டிக் கொள்ள அனைத்து பிரச்சனைகளும் சிறப்பாக அமையும்.
மிதுனம்
ஆக்கமும் ஊக்கமும் கொண்டு செயலை செய்யும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசியில் குரு அமர்ந்து பார்க்குமிடம் சிறப்பாக அமையும். தனஸ்தானத்தின் லாபாதிபதியுடன் தனாதிபதி இணைவு பெறுவது மிக சிறப்பான நற்பலனை பெற்று தரும்.
உங்களின் ராசிநாதன் விரையஸ்தானத்தில் அமர்ந்து ஆறாமிடத்தை பார்ப்பதால் கடன்களின் மூலம் இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கும். இனி எடுக்கும் முயற்சிகள் நன்மையை தரும். எந்த ஒரு கிரகமும் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தால் கெடுபலன்களை தருவதில்லை. சனியுடன் ராகுவும் இணைந்திருப்பது சிறப்பான பலன்களை தருவதால் உங்களின் எண்ணம் போல் நன்மைகளை பெறுவீர்கள்.
மூன்றாமிடத்தில் கேது அமர்வது உங்களின் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்க பெறுவீர்கள். லாபாஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி சுக்கிரன் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் சுபகாரியங்கள் சிறப்பாக அமையும். எதையும் யோசித்து செயல்படுத்துவீர்கள். குறுகிய காலத்தில் வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய யுக்திகள் மூலம் சிறப்பாக செயல்படும் திறன் உண்டாகும். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் எதையும் நல்ல யோசனையுடன் செயல்படுத்துவீர்கள். தொலை தொடர்பு ஓன்லைன் மூலம் தொடர்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். சொந்த காலில் நிற்க ஆசைபடுவது உங்களின் செயலாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 14-06-2025 சனி அதிகாலை 05.48 மணி முதல் 16-06-2025 திங்கள் பகல் 12.08 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் நல்ல வளர்ச்சி பெற்று தரும்.
கடகம்
தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரனுடன் உங்கள் யோகாதிபதி செவ்வாய் இணைவு பெறுவதும் லாபஸ்தானத்தில் தனாதிபதி சூரியன் அமர்ந்து பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்வை இடுவதும் அட்டம சனியை குரு பார்வை இடுவதும் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
விரையஸ்தானத்தின் குரு அமர்வது ஆறாமிடத்து அதிபதி குரு பனிரெண்டில் மறைவது மறைவு ஸ்தானாதிபதி மறைவது ஒரு வித அதிர்ஷ்ட பலன்களை பெற்றுத் தரும். கேட்டதை கொடுக்கும் அற்புத பலன்களை பெறுவீர்கள். அத்துடன் குரு அட்டம ஸ்தானத்தில் இருக்கும் சனியையும், ராகுவையும் பார்ப்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் ராசிக்கு கெடுபலன்கள் குறையும். இதுவரை பட்ட பல கஷ்டங்களுக்கு நல்லபடியான நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள்.
தனஸ்தானத்தில் கேது அமர்வது உங்களின் குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் உண்டாகும். எதிலும் நற்பலன்களை அடையும் சூழ்நிலைகள் வந்தாலும் உங்களின் சுயமுயற்சிகளால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். சூரியனுடன் விரையாதிபதி புதன் அமர்வது செலவுகளும் வரவுக்கு தகுந்தபடி அமையும். வருமானத்தை சேமிக்காமல் உடனே அதை வேறு பொருள் மீது முதலீடு செய்து, இருப்பை குறைத்து கொள்வதன் மூலம் தேவையற்ற விரையத்தை தவிர்த்துக் கொள்ள முடியும். புதிய முயற்சிகள் தற்சமயம் தள்ளி போடுவது நல்லது. சரியான பாதையை தேர்வு செய்து பயணம் செய்வது நல்லது. பொருளாதாரநிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 16-06-2025 திங்கள் பகல் 12.04 முதல் 18.06.2025 புதன் பகல் 04.15 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமைகளில் காலை நவகிரக குருவுக்கு மஞ்சள் துணியும், கொண்டை காலை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
சிம்மம்
எந்த காரியத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் லாபாதிபதியுடன் இணைவு பெறுவதும் லாபாதிபதி வீட்டில் குரு அமர்ந்து பார்வை இடும் இடமும் சிறப்பாக இருப்பதால் இம்மாதம் உங்களின் ராசிக்கு சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு ஏழாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவது குடும்பத்தில் சிலருக்கு சச்சரவு வந்தாலும் குரு பார்வையால் நன்மைகள் உண்டாகும். சமாதானமான பேச்சுக்கள் சுமூகமான உறவுகளை உண்டாக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொள்வீர்கள். விரையாதிபதியுடன் யோகாதிபதி இணைவு பெறுவதால் கிடைக்க வேண்டிய பல நன்மைகள் சில தடைகளுக்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். யோசித்து கொண்டிருக்காமல் உடனே செயலில் இறங்குவதன் மூலம் உங்களின் ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமையும்.
பாக்கிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி தனித்து முயற்சி ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் திறமைகளை வெளிபடுத்தும். கலைதுறையினருக்கு வாய்ப்புகளும், வளர்ச்சியும் உண்டாகும். நல்ல காரியங்களை உடனே செய்து விடவேண்டுமென்று நினைப்பீர்கள். குடும்பத்தில் சுமூகமான உறவுகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பல விடயங்களில் வீட்டுக் கொடுத்து சென்று விடுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமும் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வுகள். கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, மேற்கு, தென் கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 18-06-2025 புதன் கிழமை மாலை 04.16 முதல் 20-06-2025 வெள்ளி இரவு 07.06 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், அம்மனையும் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் திறம்பட நடக்கும்.
கன்னி
தனக்கென்று ஒரு நிலைபாடுகளை உருவாக்கி கொள்ளும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதும். ராசிக்கு தனஸ்தானத்தை குரு பார்வை இடுவதும். உங்களின் முயற்சிக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.
லாபாதிபதி சந்திரனுடன் செவ்வாய் இணைவு பெறுவது உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு தனித்து இருப்பதால் செய்யும் தொழிலில் கூட்டு தொழிலில் நன்மை இருக்காது. வரும் காலத்தில் எதையும் பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. ஆறாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை பெறுவதும் உங்களின் நீண்ட நாள் கடன் தீர்வதற்கான வாய்ப்புகள் அமையும். குறுகிய கால தொழிலில் நல்ல முன்னேற்ற உண்டாகும்.
கலைதுறையினருக்கு சில தடைகள் வந்து மறையும். உங்களின் கடும் முயற்சிகளாக உங்களின் கலை துறை வாய்ப்பை தக்க வைத்து கொள்வீர்கள். விரையாதிபதியான சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதனுடன் இணைவு பெறுவதால் செலவுகள் வந்தாலும் பாதிப்பை தராது. விரையஸ்தானத்தில் கேது அமர்வது தனஸ்தானத்தை பார்வை இடுவதும், குருவை மூன்றாம் பார்வையாக பார்ப்பதும் எதிர்பாராத அதிர்ஷ்ட நல்ல பலன்கள் கிடைக்கும்.
குடும்ப ஒற்றுமைகள் நன்றாக இருக்கும். பிறரை நம்பி பணமோ, பொருளோ வாங்கி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் முன்கூட்டியே யோசித்து செய்தல் நல்லது. அரசியலில் நல்லபடி ஆலோசனைகளை சொல்லவீர்கள். தேவைகளுக்கு பொருளாதார பலம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 20-06-2025 வெள்ளிக்கிழமை இரவு 07.07 முதல் 22-06-2025 ஞாயிறு இரவு 09.27 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு சிவப்பு தாமரை பூ வைத்து குங்குமம் சாற்றி நெய் தீபமேற்றி சக்கரை கலந்த மாவு வைத்து மனம் உருக வேண்டிக் கொள்ள பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.
துலாம்
துணிச்சலும் தைரியமும் கொண்டு விளங்கும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் பார்வை இருப்பது சுபகாரியங்களும் நல்ல முயற்சிகளும் கைகூடும். லாபஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்ப்பதும் நன்மையை தரும். பஞ்சம ஸ்தானத்தில் சனி / ராகு இணைந்திருப்பது உங்களின் பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.
உங்களின் ராசியை குரு பார்ப்பது உங்களின் மூன்றாமிடத்தையும், பூர்வ புண்ணியஸ்தானத்தையும் பார்ப்பது இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களை பெறுவீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதில் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களை பெறுவீர்கள். தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று களத்திர ஸ்தானதிபதியுடன் இணைவு பெறுவது கூட்டுத் தொழிலிலும் ஓன்லைன் வர்த்தகம் மூலம் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் அமையும்.
விரையஸ்தானத்திற்கு அதிபதியான புதன் அட்டமஸ்தானத்தில் அமர்வது இடம், மனை அமைய வாய்ப்புகள் அமையும். சொந்த தொழில் செய்யும் நிலை ஒரு சிலருக்கு அமையும். கலைதுறையினருக்கு எதிர்பார்த்த நல்ல காலமாக அமையும். கொடுத்த இடத்தில் தடையின்றி பணம் வந்து சேரும். எதையும் பலமுறை யோசித்து செய்யும் நீங்கள் பிறருக்கு உதவி செய்ய நினைத்து வாங்கி கொடுத்த பணமோ / பொருளோ கிடைக்காமல் இதுவரை இருந்த நிலை மாறி விரைவில் அவரிடமிருந்து கிடைக்க பெறுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்வம் இருக்கும் மற்றவருக்கு விட்டு கொடுக்கும் உங்களுக்கு உதவி கேட்டும்போது யாரும் உதவிக்கு வரமாட்டார்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 22-06-2025 ஞாயிறு இரவு 09.28 முதல் 24-06-2025 செவ்வாய் இரவு 12.13 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரையும் சனிக்கிழமைகளில் பைரவரையும் தொடர்ந்து வணங்கி வர எடுத்த காரியம் ஜெயிக்கும். கொடுத்த காரியம் வெற்றியை தரும்.
விருச்சிகம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் ராசியை தொழில் ஸ்தானாதிபதி சூரியன் பார்ப்பதும் உங்களின் வளர்ச்சிக்கான வழியை பெறுவீர்கள். எப்பொழுது யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களை மட்டுமே நம்பி வாழ்வீர்கள். கிடைத்த நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்.
முதலீடு இல்லாத தொழிலில் அதிகமான கவனம் செலுத்துவீர்கள். குறையில்லாத மன நிறைவு கொண்டு செயல்படுவீர்கள். பொதுவான விடயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து செயல்படுவீர்கள். சனியால் பாதிப்பு மற்ற கிரகங்களால் பாதிப்பை தந்தாலும் நீங்கள் உங்களை மட்டுமே நம்பி செயல்படுவீர்கள்.
எந்தவித காரணமும் இன்றி உங்களின் செயல் இருக்காது சரியான இடத்தில் நீங்கள் உங்களின் ஒவ்வொரு செயலையும் செய்து வருவீர்கள். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல உங்களின் செயலை செய்து வருவீர்கள். சந்திரனுடன் செவ்வாய் இணைவு பெற்று பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது உங்களின் செயலில் ஊக்கத்தையும், வருமானத்தையும் பெற்று தரும்.
சந்திரன் உங்களின் யோகாதிபதி என்பதால் திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும். தொழிலாளர்களின் நன்மைகாக சிலர் பாடுபடுவீர்கள். உங்களிடம் பசியோடு வந்தால் உடனே அவருக்கு உணவு வழங்குவீர்கள். இரக்க குணம் கொண்டு விளங்கும் உங்களுக்கு நியாயமான கோபமும் வரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மற்றவரை நம்பி இல்லாமல் நீங்கள் உங்களை தயார் செய்து கொள்வீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், திங்கள், புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 24-06-2025 செவ்வாய் இரவு 12.14 முதல் 27-06-2025 வியாழன் அதிகாலை 04.13 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும் அரளி பூ மாலை சாற்றி எள் கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
தனுசு
உறுதியுடன் தன்னை தயார் செய்து கொள்ளும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து குருவை மூன்றாம் பார்வையாக பார்ப்பதும் சிறப்பான நற்பலன் பெற்று தரும். உங்களின் ராசிநாதன் குரு பார்வை பெறுவது முற்றிலும் நற்பலன்களை பெற்றுத் தரும். சுமையாக இருந்து வந்த பல காரியங்கள் உங்களின் வெற்றிக்கு வழியை தேடி தரும் காலமாக அமையும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
மூன்றாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவது நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நற்பலனை பெற்று தரும். பஞ்சம ஸ்தானாதிபதி செவ்வாய் அட்டமஸ்தானத்தில் அட்டமாதிபதி சந்திரனுடன் இணைவு பெறுவது வரவுக்கு மீறிய செலவுகளை பெற்று சிரமம் கொள்வீர்கள்.
அரசியலிலும், பொது வாழ்விலும் மற்றவருக்கு உதவி செய்வதை கொள்கையாக கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் யோகாதிபதி சூரியன், புதனுடன் இணைவு பெறுவது தடைபட்ட காரியங்களில் சற்று முன் நோக்கி நகரும் வாய்ப்பை பெறுவீர்கள். தொழில் ஸ்தானாதிபதி மறைவு பெறுவதால் சில நேரம் பார்த்து கொண்டிருக்கும். தொழிலை விட்டு வேறு தொழில் செய்ய வேண்டி வரும்.
எதையும் காலதாமதபடுத்தாமல் உடனே செய்து கொள்வது நல்லது. மனித வளம் நலம் பெற உங்களால் செய்ய கூடிய பணிகளை செய்து அவர்களுக்கு உதவுவீர்கள். காரணமின்றி யாரிடமும் தொடர்பு கொள்ளமாட்டீர்கள். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் தொடர் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 27-06-2025 வெள்ளி அதிகாலை 04.14 முதல் 29-06-2025 ஞாயிறு காலை 10.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்து வரவும், நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் திறம்பட நடக்கும்.
மகரம்
கொண்ட கொள்கையை திறம்பட செய்து மேன்மை கொள்ளும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் ராசியில் உச்சம் பெறும் செவ்வாய் ராசியை பார்ப்பதும் நற்பலன்களை பெற்று தரும்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. மகர ராசிக்கு பாவியான குரு பார்த்தாலும் நற்பலன்.. மறைந்தாலும் நற்பலன்.. ஆறாமிடத்தில் குரு மறைவு பெறுவது உங்களுக்கு நன்மை பெற்று தரும். ஏழரை சனி முடியும் தருவாயில் இருப்பதால் உங்களுக்கு ஏதாவது வகையில் உங்களுக்கு சனி உதவியை செய்வார்.
பஞ்சமஸ்தானத்தில் அட்டமாதிபதி சூரியன் அமர்வது கோவில் சென்று பரிகாரம் செய்து துன்பம் போக்கிக் கொள்ள வாய்ப்புகளை பெறுவீர்கள். இரண்டில் ராகு தனவரவுகளை கொடுத்தாலும் கொடுத்து கெடுப்பது ராகுவின் குணம் என்றாலும் குரு பார்வை பெறுவது. இதனை சரிசெய்து விடும்.
சுக்கிரன் சுகஸ்தானத்தில் அமர்வது தொழிலிலும், உத்தியோகத்திலும் உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும், வாய்ப்பும் அமையும். தேடினாலும் கிடைக்காத நற்பலன்களை பெற்று வளம் பெறுவீர்கள். பொது வாழ்விலும் உங்களின் தேவைகள் மற்றவருக்கு உதவுவதன் மூலம் கிடைக்க பெறுவீர்கள்.
கேட்டதை கொடுக்கும் அட்சய பாத்திரம் போல மற்றவரின் கஷ்டங்களுக்கு உங்களால் உண்டான உதவிகளை செய்து வருவீர்கள். சரியான நேரத்தில் உங்களின் செயலை செய்து பலன் பெறுவீர்கள். சுயதொழிலில் இனிமேன்மை பெறும் வாய்ப்பை பெறுவிர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 01-06-2025 ஞாயிறு இரவு 02.33 முதல் 04-06-2025 புதன் பகல் 11.23 மணி வரையும்.
29-06-2025 ஞாயிறு காலை 10.25 முதல் 01-07-2025 செவ்வாய் மாலை 06.57 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்று அருகம்புல் மாலை இட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.
கும்பம்
நினைத்ததை தடையின்றி நடத்தி கொள்ள எண்ணும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்வதும் குரு பார்வை சனிக்கு கிடைப்பது ஊக்கமும், மனதில் தைரியமும் வந்து வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதற்கு அஞ்சாமல் செயல்படுவது உங்களின் இயல்பாக அமையும்.
ஜென்ம ராகு மனதில் குழப்பத்தை தந்து ஒரு முடிவு எடுப்பதில் தாமதம் உண்டானாலும் குரு பார்வையால் அதில் மாற்றம் உண்டாகும். தைரிய ஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரன் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்களின் முயற்சிக்கு நற்பலன்கள் கிடைக்கும். கலைதுறையினருக்கு கேட்ட இடத்தில் வாய்ப்புகளை பெற்று வளம் பெறுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் நினைத்தபடி செயல்படுவீர்கள். யாரையும் எதிர்பார்த்து கொண்டிருக்காமல் உடனே செயல்பட தொடங்குவீர்கள்.
களத்திரஸ்தானாதிபதி சூரியன் சுகஸ்தானத்தில் பஞ்சமாதிபதியுடன் இணைவு பெறுவது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எடுத்த காரியத்தை தொடர் முயற்சி மூலம் நற்பலனை பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் முக்கிய காரணியாக நினைத்து தொடர்ந்து அதன் வழியில் பயணம் செய்து வளம் பெறுவீர்கள்.
அரசியல் வாழ்வில் உங்களின் செல்வாக்கு மேலும் உயரும். உங்களின் ஆதரவாளர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். தொழிலில் உங்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் பலம் கிடைக்க பெறுவீர்கள். முதலீடு இல்லாத ஓன்லைன் வர்த்தகம் மூலம் சிலருக்கு நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். சொந்த உறவுகளை புதுப்பித்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 04-06-2025 புதன் பகல் 11.25 முதல் 06-06-2025 வெள்ளி இரவு 10.18 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை, ஞாயிறுகளில் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து ஐந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருக வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து காரியமும் திறம்பட நடக்கும்.
மீனம்
சாதனை படைக்க எண்ணி அனுதினமும் செயல்படும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவுஸ்தானங்களை பார்வை இடுவது மிக்க நல்ல பலன்களை பெற்று தரும். தனஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து பொருளாதார வனத்தை பெற்று தருவார். கொடுத்த இடத்தில் உங்களுக்கு பொருள் வந்து சேரும்.
பஞ்சமாதிபதி ஆட்சி பெற்று தனாதிபதி செவ்வாயுடன் கூடி இருப்பது உங்களின் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். எதற்கும் காத்திருக்காமல் உடனே செயலில் இறங்கி வெற்றி காண்பீர்கள். மலை போல வந்த காரியம் கூட பனி உருகியது போல மறையும். ஏழரை சனி காலம் என்றாலும் உங்களின் நோக்கம் தடையின்றி நிறைவேறும்.
புதிய சகாப்தம் உருவாக்க எண்ணும் உங்களின் எண்ணம் சரியாக நடக்கும். வார்த்தைகளை சொல்லி காட்டுவதை காட்டிலும் அதனை செயலில் காட்டிட விரும்புவீர்கள். துணிச்சலும் மனவலிமையும் உங்களை பல மடங்கு வெற்றிக்கு வழிவகுக்க செய்யும். யாரையும் கேட்டு செய்ய வேண்டுமென்ற நிலைமாறி அதை தானே முடிவு எடுக்கும் நிலையை உருவாக்கிக்கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய திட்டங்களில் நம்பிக்கையை உண்டாக்கி கொள்வீர்கள். ஆறாம் அதிபதி சூரியன் முயற்சி ஸ்தானத்தில் அமர்வது உங்களின் முயற்சிகள் மேன்மை பெற செய்யும். கடுமையான கஷ்டங்களிலிருந்து இனி விடுபடுவீருகள். சொந்த உறவுகளை விட்டு பிரிந்து இருந்த நீங்கள் இனி இணைந்து செயல்படுவீர்கள். கடந்த கால நினைவுகளிலிருந்து விடுபட்டு விடுதலை அடைந்து புதிய நடைமுறைகளை பின்பற்றி வளம் பெறுவீர்கள். தொழிலிலும், உத்தியோகத்திலும் திறம்பட செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்: 06-06-2025 வெள்ளி இரவு 10.19 முதல் 09-06-2025 திங்கள் காலை 10.08 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் நவகிரக தீபம் ஏற்றி வழிபட்டு ஆஞ்சநேயர் வழிபாடும் செய்து வர உங்களின் ஒவ்வொரு செயலுக்கு ஆக்கமும் ஊக்கமும் பெற்று வளம் பெறுவீர்கள்.
கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM