நாட்டை அச்­சு­றுத்­தி­வரும் டெங்கு நுளம்­பு­களின் தாக்கம் கார­ண­மாக கொழும்பு மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களே அதி­க­மாக பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இந்த நுளம்­பு­களின் தாக்­கத்­தி­லி­ருந்து பெறு­ம­தி­மிக்க உயிர்­களை பாது­காப்­ப­தற்கு பொது­மக்கள் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டத்தில் கை ­கோர்க்க வேண்­டு­மென ஐக்­கிய தேசிய கட்­சியின் கல்­வெட்­டிய தொகுதி அமைப்­பாளர்  வி.பிரகாஷ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

வத்­தளை பகு­தி­யிலும் டெங்கு நுளம்­பு­களின் தாக்கம் அதி­க­மாக உள்­ளது. அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­தாலும் அதற்கு மக்­களின் ஒத்­து­ழைப்பு போது­மா­ன­தாக இல்­லை­யெ­னவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

டெங்கு ஒழிப்பு தொடர்பில் பொது­மக்கள் கூடிய கவனம் செலுத்­த­வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் தமது வீடு மற்றும் அதனை சூழ­வுள்ள பகு­தி­களை எப்­பொ­ழுதும் சுத்­த­மாக வைத்­தி­ருக்­க­வேண்டும். குறிப்­பாக டெங்கு நுளம்­புகள் உற்­பத்­தி­யாகி பர­வாத வகையில் சுற்­றா­டலை வைத்­தி­ருக்க வேண்டும்.

அதே­போன்று நிறு­வ­னங்­களும் பாட­சா­லை­களும் மற்றும் மதஸ்­த­லங்­களும் கூட கட்­டடம், அதனை  சூழ­வுள்ள பகு­தி­க­ளை­எப்­பொ­ழுதும் சுத்­த­மாக வைத்­தி­ருக்­க­வேண்டும்.குறிப்­பாக நீர் தேங்­கி­யி­ருக்­காத வகையில் சுற்­றா­டலை வைத்­தி­ருக்­க­வேண்டும்.

அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டத்­தினால் மாத்­திரம் டெங்கு நுளம்­பு­களின் தாக்­கத்­தினை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. எனவே பொது­மக்கள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அந்­தந்த பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­படும் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டங்­க­ளுடன் கை கோர்த்து செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த பயங்கர நுளம்புகளின் தாக்கத்திற்கு நாளை நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ பலியாக நேரிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.