இன்றைய சூழலில் எம்மில் பலரும் வங்கி அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெற்று தங்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்குகிறார்கள். தொடக்கத்தில் வளர் பிறையாக வளர்ச்சி அடைந்த வணிகம்.. நாளடைவில் தேய்பிறையாகி நஷ்டத்தை சந்திக்க தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் உங்களுடைய தொழிலில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வெற்றியை பெறுவதற்கான சூட்சும குறிப்புகளை எம்முடைய முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
உலகமயமாதல் - தனியார்மயமாதல்- போன்ற காரணங்களால் எம்முடைய தயாரிப்புகளுக்கு சர்வதேச அளவில் போட்டிகள் உருவாகுவதால் தொழிலில் லாபம் குறைய தொடங்குகிறது.
இந்தத் தருணத்தில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்ளவும் காளையின் பொம்மை ஒன்றை அல்லது காளையின் சிலை ஒன்றை அல்லது காளையின் புகைப்படத்தை உங்களுடைய விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியில் இடம்பெறச் செய்யுங்கள். அந்த சிலை மூலமாக பரவும் நேர் நிலையான ஆற்றல் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.
ஏற்கனவே எம்மில் சிலர் திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளின் திருவுருவ புகைப்படத்தை வைத்துக்கொண்டு லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.
வேறு சிலர் ஏழு வெள்ளை குதிரை ஓடுவது போன்ற புகைப்படத்தை வைத்துக்கொண்டு லாபம் ஈட்டி கொண்டிருப்பார்கள். இவர்கள் காளையின் சிலை அல்லது காளையின் புகைப்படத்தையும் உங்களுடைய விற்பனை நிலையத்தில் இடம்பெறச் செய்தால் தொழில் அமோகமாக சிறக்கும். லாபமும் உயரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM