தீர்­வுகள் ஏது­மின்றி இலங்­கையில் நீடித்து சென்­று­கொண்­டி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் தொடர்பில் இந்­திய மத்­திய அர­சாங்­கமும் ஆளும் பா.ஜ.கட்­சியும் ஆக்­க­பூர்­வ­மா­னதும் உணர்வு பூர்­வ­மா­ன­து­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் இந்­தி­யாவை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்கை வந்­துள்ள தமி­ழ­கத்தின் பாரா­தீய ஜனதா கட்­சியின் தலைவி தமி­ழீசை சௌந்­த­ர­ராஜன்  யாழ்.குடா­நாட்­டிற்கு விஜயம் மேற்­கொண்டு நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை அவ­ரது அலு­வ­ல­கத்தில் சந்­தித்­தி­ருந்தார்.

இந்த சந்­திப்­பின்­போதே முத­ல­மைச்சர் சி.வி. மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தமி­ழிசை சௌசந்­த­ர­ரா­ஜ­னு­ட­னான  சந்­திப்­பின்­போது வட­மா­காண அமைச்சர் அனந்தி சசி­தரன் மற்றும் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்­டோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.இந்த சந்­திப்­பின்­போது சம­கால அர­சியல் நிலை­வ­ரங்கள் வட­மா­காண சபை எதிர்­கொண்­டுள்ள சவால்கள் மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்கள் என பல்­வேறு விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.இதே­வேளை நாட்டில் நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 13 ஆவது திருத்­த­மா­னது சம­கால நிலை­மை­க­ளுக்கு தீர்­வாக அமை­யாது.

இத­னிலும் அதி­க­ரித்த அதி­கா­ரங்­களை உள்­ள­டக்­கி­ய­தான பொறி­மு­றை­யொன்றே அவ­சி­ய­மாகும். அத­னூ­டா­கவே எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற தீர்­வு­களை எட்­ட­மு­டியும். இவ்­வி­ட­யத்தில்  இந்­திய மத்­திய அர­சாங்­கத்­தி­னதும் பார­திய ஜன­தாக்­கட்­சி­யி­னதும் தலை­யீ­டு­களும் ஈடு­பா­டு­களும் அவ­சி­ய­மா­க­வி­ருக்­கின்­றன. இலங்­கையில் உள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை எட்­டு­வ­தற்கு இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீ­டு­க­ளு­ட­னான ஆக்­க­பூர்வ நட­வ­டிக்­கை­களை எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம். எமது நிலைப்­பாட்டை உங்­க­ளது கட்­சி­யி­டமும் உங்­க­ளது மத்­திய அர­சாங்­கத்­தி­டமும் எடுத்­து­ரை­யுங்கள் என்று முதலமைச்சர் சி.வி. தமிழிசையிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த தமிழிசை சௌந்திரராஜன் தங்களின் கோரிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் எமது கட்சியிடத்திலும் அதே நேரம் மத்திய அரசாங்கத்திடமும் எடுத்துரைப்பேன் எனமுதல்வருக்கு உறுதி வழங்கியுள்ளார்.