(நெவில் அன்தனி)
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட்டில் 7 லீக் போட்டிகளை கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) தீர்மானித்துள்ளது.
இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளதால் அவ்வணி சம்பந்தப்பட்ட போட்டிகளை கொழும்பில் நடத்துவதற்கு ஐசிசி முடிவுசெய்துள்ளது.
எட்டு நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து நவம்பர் 2ஆம் திகதிவரை இந்தியாவிலும் இலங்கையிலும் ஐந்து மைதானங்களில் நடைபெறும்.
இந்தியாவில் 12 வருடங்களின் பின்னர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
பெங்களூரு எம். சின்னசுவாமி விளையாட்டரங்கு, குவாஹாட்டி ஏசிஏ விளையாட்டரங்கு, இந்தூர் ஹோல்கார் விளையாட்டரங்கு, விசாகபட்டினம் ஏசிஏ - விடிசிஏ விளையாட்டரங்கு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 5 அரங்குகளில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும்.
ஒருவேளை பாகிஸ்தான் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்று இறுதி ஆட்டத்திற்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும்.
முதலாவது அரை இறுதிப் போட்டி கொழும்பில் அல்லது குவாஹாட்டியில் அக்டோபர் 29ஆம் திகதி நடைபெறும். இரண்டாவது அரை இறுதிப் போட்டி பெங்களூருவில் அக்டோபர் 30ஆம் திகதி நடைபெறும்.
இறுதிப் போட்டி பெங்களூருவில் அல்லது கொழும்பில் நவம்பர் 2ஆம் திகதி நடைபெறும்.
பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறினால் அரை இறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் இந்தியாவில் நடைபெறும்.
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நடப்பு உப சம்பியன் இங்கிலாந்து, வரவேற்பு நாடான இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய ஆறு அணிகள் உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.
பாகிஸ்தானும் பங்களாதேஷும் தகுதிகாண் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன.
இந்த எட்டு அணிகளும் லீக் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். இதற்கு அமைய லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறும், 3 நொக் அவுட் போட்டிகளுடன் மொத்தமாக 31 போட்டிகள் நடத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM