உத்­த­ரப்­பி­ர­தேச அரசு  திரு­மண பரி­சாக தமது மக்­க­ளுக்கு  ஆணுறைகள் வழங்­கப்­படும் என்று அறி­வித்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

திரு­மணப் பரி­சாகத் தங்கம், வெள்ளி, வைரம் என்று பரி­ச­ளிப்­பதைப் பார்த்­தி­ருக்­கிறோம். ஆனால் உத்­த­ரப்­பி­ர­தேச மாநில அரசு தன் மக்­க­ளுக்குக் திரு­மணப் பரி­சாக ஆணுறைகள்  கொடுப்­ப­தாக அறி­வித்து அதிர வைத்­துள்­ளது.

குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்­டத்தை வலி­யு­றுத்த புது­மணத் தம்­ப­தி­ய­ருக்குக் கல்­யாணப் பரி­சாக ஆணு­றைகள்  வழங்கும் திட்­டத்தை அறி­முகம் செய்­ய­வுள்­ளது அம்­மா­நில அரசு. இதற்கு ‘மிஷன் பரிவார் விகாஷ் எனப் பெய­ரிட்­டுள்­ளது. உலக மக்கள் தொகை தின­மான எதிர்வரும் 11ஆம் திகதி இத்­திட்­டத்தைத் தொடங்க முடிவு செய்­துள்­ளது. இது குறித்து திட்­டத்தின் மேலாளர் அவினாஷ் சக்­சேனா தெரிவிக்கையில், ‘‘புது­மணத் தம்­ப­தி­க­ளுக்குத் திரு­மண வாழ்வின் பொறுப்பை உணர்த்தும் வகையில் இத்­திட்டம் தொடங்­கப்­பட உள்­ளது. பரிசுப் பெட்­டியில் ஆணு­றைகள் அவ­ச­ர­காலக் கருத்­த­ரிப்புத் தடுப்பு மாத்­தி­ரைகள், பொது­வான கருத்­த­ரிப்புத் தடுப்பு மாத்­தி­ரைகள், டவல்கள், கைக்குட்டை, நகம் வெட்டி, சீப்பு, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் என்கிறார்.