இரத்தினேஸ்வரம் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரத்தின பூமிக்கான புனித தீர்த்த யாத்திரையானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள், கலசங்கள் ஆகியன விசேட பூஜை வழிபாடுகளுடன் கொழும்பிலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படவுள்ளன.
எதிர்வரும் 06 ஆம் மற்றும் 7 ஆம் திகதி எண்ணெய் காப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இரத்தினபுரி நகர்,ஸ்ரீ திரிபுர சமேத இரத்தின சபேஸ்வரர் திருகோயில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
நாளை புதன்கிழமை (04) காலை 7 மணியளவில் விசேட பூஜைகளுடன் கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
இதனையயடுத்து, கொழும்பு 06 - மயூரபதி அம்மன் கோயில் ,கொழும்பு 11 - ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் , கொழும்பு 11 முத்துவிநாயகர் கோயில், கொழும்பு 11- புதிய கதிரேசன் கோயில் , கொழும்பு 11 - பழைய கதிரேசன் கோயில் , கொழும்பு 11- சின்ன காளியம்மன் கோயில் , கொழும்பு 11- பெரிய காளியம்மன் கோயில் , கொழும்பு 11- சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி கோயில் , அவிசாவளை - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் , - எஹலியகொட - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் , இரத்தினபுரி - ஸ்ரீ மகா காளியம்மன் கோயில், இரத்தினபுரி - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் , இரத்தினபுரி - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் போன்ற புனித ஸ்தலங்களின் ஊடாக ஊர்வலம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM