வெற்றி பெறுபவர்கள் மீண்டும் இணைந்தால் வெற்றியும் தொடர்ந்து வரும் என்பதை நிரூபிக்க வருகிறது 'கவலை வேண்டாம்'.
தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் விண்ணை தாண்டி வருவாயா, கோ 2, யாமிருக்க பயமே உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி வரும் ஆர்.எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பான 'கவலை வேண்டாம் ' நேற்று குன்னூரில் தொடங்கியது.
கோ படம் மூலம் ஆர்.எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்தாருடன் இணைந்து பணியாற்றிய ஜீவா இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். சமீபகாலமாக இரசிகர்களின் மத்தியில் புகழின் உச்சத்தை தொடும் பாபி சிம்மா, ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார். காஜல் அகர்வால் ஜீவாவுக்கு இணையாக நடிக்கிறார். சுனைனா, 144 படத்தின் மூலம் அறிமுகமான சுருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா, ஆர்.ஜே பாலாஜி,பால சரவணன், மயில் சாமி, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே மனித உணர்வுகளின் குவியலாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். கோ 2 படத்தின் இசை மூலம் இரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த லியான் ஜேம்ஸ் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர். கே.வி ஆனந்திடம் உதவியாளராக பணியாற்றிய அபிநாதன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ரூபன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, செந்தில் ராகவன் அரங்கமைக்கிறார். பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஆர்.எஸ் இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
'உறவுகளும் உணர்வுகளும் எவ்வளவு முக்கியமான இடத்தை மனித வாழ்வில் இடம் பிடிக்கிறதோ, அதே அளவுக்கு ஊடலும் கூடலும் இடம் பெறுகிறது. பிரிவைத் தொடர்ந்து வரும் இணைதல் மனிதன் உறவுகளின் பயணத்தில் முக்கியமானது. இத்தகைய நுணுக்கமான மனித உணர்வுகளை பிரதிபலிப்பதற்கு சிறந்த நடிகர்கள் தேவை. அந்த வகையில் ஜீவா இந்த கதாப்பாத்திரத்துக்கு மிக மிக பொருத்தமானவர். அவர் கதைகேற்ப, பாத்திரத்துக்கு ஏற்ற நுண்ணிய உணர்வுகளை பிரதிபலிப்பவர். வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று எப்போதும் ஈடுபாடு உள்ள அவருக்கு 'கவலை வேண்டாம்' படத்தின் கதாப்பாத்திரம் மிக பொருத்தமானது. காஜல் அகர்வால் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் தடவை. பாபி சிம்மா தற்போது எங்களது தயாரிப்பில் 'கோ 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கவலை வேண்டாம்' படம் மூலம் நாங்கள் மீண்டும் இணைந்துப் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. திறமைகளின் சங்கமமாக இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்பட வர்த்தகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.
'கவலை வேண்டாம்' படத்தின் கதை இதுவரைக் கேட்டிராதது, பார்த்திராதது. படம் பார்க்கும் ஒவ்வொரு இரசிகனும் இந்தக் கதையில் தன்னை தானே பார்ப்பது நிச்சயம். எங்களது நிறுவனத்தில் தயாரித்த வெற்றி படங்களின் முக்கியக் காரணங்களான ஜீவா மற்றும் டிகே ஆகிய இருவருடனும் மீண்டும் இணைந்துப் பணியாற்றுவதில் மிகுந்த பெருமை' என்றுக் கூறினார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM