மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
ஜமைக்காவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் கைல் ஹோப் 46, ஷாய் ஹோப் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 111 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் கார்த்திக் 50, ரஹானே 39 ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதில் முதல் போட்டி மழை காரணமாக தடையானது. மற்ற 3 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணி தொடரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM