மருந்து தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொவிட் அதிகரிப்பு ; நிலைமையை சமாளிக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை - சஜித்

02 Jun, 2025 | 06:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையில், கொவிட் புதிய திரிபும் பரவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த முன்னாயத்த திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

தற்போது நாட்டில் பல்வேறு மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் 180 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வைத்தியசாலை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடங்குகின்றன. இது தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைக்கான தீர்வினையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை.

எல்.பி. 8.1 எனப்படும் கொவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றது. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை. இந்த துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். இந்நிலைமையில் தற்போது சின்னம்மை நோயும் அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு ஆகக் குறைந்தது 6 வாரங்களாவது தொடர்ச்சியாக சிகிச்சையளிக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம்!! பெற்றோர்களுக்குப் வவுனியா...

2026-07-15 10:36:22
news-image

அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு

2026-07-15 10:20:57
news-image

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப்...

2026-07-15 10:23:04
news-image

யாழ். காக்கை தீவு மீள் சுழற்சி...

2026-07-15 10:16:12
news-image

இலங்கை அரசியல்வாதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்...

2026-07-15 10:20:16
news-image

யாழ். காரைநகரில் வெளிநாட்டவர்களின் நகைகள், பணங்களை...

2026-07-15 09:52:17
news-image

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக...

2026-07-15 09:44:34
news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10