வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

02 Jun, 2025 | 04:05 PM
image

இன்றைய திகதியில் தெற்காசியா முழுவதும் 40 சதவீதத்தினருக்கும் மேற்பட்ட மக்களுக்கு வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதற்கு எம்முடைய மக்களில் பலரும் முழுமையான விழிப்புணர்வை பெற்று நிறைவான நிவாரண சிகிச்சையை பெறுவதில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள் இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கும் வகையில் நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வெரிகோஸ் வெயின் என்பது எம்முடைய கால் பகுதியில் இருந்து இதயத்திற்கு அசுத்தமான ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு  ஏற்பட்டிருப்பதை குறிப்பிடுகிறது. 

இதன் காரணமாக பலருக்கு விவரிக்க இயலாத வகையினதான பாரிய அசௌகரியங்கள்- சுகவீனங்கள் ஏற்படும். இதற்கு வைத்தியர்கள் சத்திர சிகிச்சை முறையில் நிவாரணம் வழங்கி வருகிறார்கள். 

இந்த தருணத்தில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் நோயாளிகளை, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்கிறார்கள். 

இதற்குப் பின் சிறிய அளவில் நுண் துளை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட நரம்புப் பகுதிகளுக்கு வீணசீல் ( VenaSeal) எனப்படும் பிரத்யேக பசையை உள்ளே செலுத்துகிறார்கள். 

இந்த பசை உள்ளே சென்று பாதிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த நரம்புகளை சீரமைக்கிறது. அதன் பிறகு ரத்த ஓட்டம் இயல்பாக நடைபெறுகிறது.

வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காண இயலாத நோயாளிகளுக்கு இத்தகைய நவீன சிகிச்சை பலனளிக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்கள் வரை தொடர்ச்சியாக வைத்தியர்களின் கண்காணிப்பில் நோயாளிகள் இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் மருந்தியல் சிகிச்சையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைத்தியர் அபினவ் தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீர் வழியாக சீழ் வெளியேறினால் அதற்கான...

2025-06-21 16:45:30
news-image

ஆறு மாதங்களில் வீதி விபத்துகளில் 2,000...

2025-06-20 10:32:02
news-image

உயர் குருதி அழுத்த பாதிப்பை அலட்சியப்படுத்தலாமா..?

2025-06-19 17:22:27
news-image

விரும்பதகாத சருமத்திற்கான நவீன சிகிச்சை

2025-06-18 17:38:39
news-image

உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை

2025-06-17 16:02:55
news-image

ஒவேரியன் டெரடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-06-16 17:30:08
news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20