நுவரெலியா மாவட்ட லெவலென் தொட்டத்தின் ஹெரிமிடேச் பிரிவில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேல் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகரும் தேசிய மக்கள் சக்தி உயர்பீட செயற்குழு உறுப்பினருமான கலாநிதி பி. பி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
லெவலென் தொட்டத்தின் ஹெரிமிடேச் பிரிவில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண்டி மாவட்டத்தில் மண் சரிவு அபாயத்திற்கு உட்பட்ட 10 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
பன்னவிலை என்ற பிரதேசத்தில் 19 வருடங்கள் மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட இடமொன்றுக்கு இன்று வரையிலும் எந்தவிதமான பாதுகாப்பான மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லை.
தேசிய மக்கள் சக்தியின் முதல் ஏற்பாடாக மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வேலைத் திட்டம் முதல் கட்டமாக பதுளையில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருணத்தில் இருக்கின்றது என்றார்.
இதன்போது கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட 30 குடும்பங்களின் லயின் குடியிருப்புகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM