10 ஆண்­டு­க­ளாக பல முக்­கிய டென்னிஸ் வீரர்கள் ஆட்ட நிர்ணயம் எனப்­படும் சூதாட்­டத்தில்ஈடு­பட்­டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த 10 ஆண்­டு­களில் உலகதர­வ­ரிசைப் பட்­டி­யலில் முதல் 50 இடங்­களில் இருந்த டென்னிஸ் வீரர்­களில் 16 பேர் கோடிக் கணக்கான ரூபாய் புரண்ட சூதாட்­டத்தில் ஈடு­பட்­ட­தா­கவும், இவர்­களில் பலர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்­ற­வர்கள் என்றும், பி.பி.சி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் என்ற நிறு­வ­னமும் சேர்ந்து தகவல் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கான ஆதா­ரங்கள் தங்­க­ளிடம் இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள இந்த நிறு­வ­னங்கள், இது குறித்து 2007ஆம் ஆண்டு டென்னிஸ் கட்­டுப்­பாட்டு அமைப்­பான ஏ.டி.பி. ரக­சி­ய­மாக விசா­ரணை நடத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்­ளன.

இந்த விசா­ர­ணையில் ரஷ்யாஇ இத்­தாலி, சிசிலி ஆகிய நாடு­களில் கோடிக்­க­ணக்­காண ரூபாய் அள­வுக்கு டென்னிஸ் சூதாட்டம் நடை­பெற்­றது கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கவும் பி.பி.சி. கூறி­யுள்­ளது.

மூன்று விம்­பிள்டன் போட்­டி­க­ளிலும் சூதாட்டம் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. டென்னிஸ் வீரர்­களை அவர்கள் தங்கும் அறை­களில் சந்­திக்கும் சூதாட்ட தர­கர்கள்இ குறைந்­தது 50 ஆயிரம் அமெ­ரிக்க டொலர்கள் என்ற தொகையில் இருந்து சூதாட்டம் நடத்­தி­ய­தா­கவும் கூறி­யுள்­ளது.

இது தொடர்­பாக நடத்­தப்­பட்ட விசா­ர­ணையில் 28 டென்னிஸ் வீரர்கள் மீதான குற்­றச்­சாட்டு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னும், அவர்கள் மீது எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை எனவும் பி.பி.சி. குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.