தென்மேற்கு பருவமழையால் இலங்கையில் 14 மாவட்டங்களில் 9,975 பேர் பாதிப்பு ; 2,582 வீடுகள் சேதம்

Published By: Vishnu

01 Jun, 2025 | 07:38 PM
image

நாட்டில் கடந்த ஒருவாரமாக நிலவும் தென்மேற்கு பருவமழை வீழ்ச்சியினால் இதுவரையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 9975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2576 வீடுகள் பகுதியளவிலும், 06 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் ஞாயிற்றுக்கிழமை (01) அறிவித்துள்ளது.

மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்  இன்றைய தினம்  அவ்வப்போது மழை பெய்யகூடும். மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைம ற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் .  மழையுடனான காலநிலை தொடர்வதால் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு  மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல்   மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும் அல்வப்போது மணித்தியாலத்திற்கு  30-40 கி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீச கூடும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடந்த ஒருவார காலமாக நிலவும் மழையுடனான காலநிலையால் 14 மாவட்டங்களில் 2641 குடும்பங்களைச் சேர்ந்த 9975 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் காற்றினால் 2576 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில், 06 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஏற்பட்ட இடர்களினால் 19 பேர் காயமடைந்துள்ளனர்.மழையுடனான காலநிலை தொடர்வதால் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37