இலங்கைக்கு படையெடுக்கவுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி

Published By: Priyatharshan

07 Jul, 2017 | 05:19 PM
image

இலங்கைக்கு இம் மாத இறுதியில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு,

ஜூலை மாதம்  26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல்  7 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல்  16 ஆம் திகதி வரை கண்டி பல்லேகல மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 3 ஆவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 5 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிசெப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான ஒருரேயொரு இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31