கல்முனையில் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும்

01 Jun, 2025 | 01:49 PM
image

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. 

மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. 

இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெறவுள்ளது.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான அன்றைய கருத்தரங்கின் வளவாளராக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் கலந்து கொள்ளவுள்ளார் என அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27