bestweb

உள்ளூராட்சிளுக்கு தெரிவானவர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியீடு

01 Jun, 2025 | 10:32 AM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம்  19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி  தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை  பிரசுரித்துள்ளது.

(262 ஆம் பிரிவு) உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 66 (2) அத்தியாயத்தின் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு  சனிக்கிழமை (31) பிரசுரித்துள்ளது.

பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நிர்வாக மாவட்டத்தில் உள்ள,ஒவ்வொரு தொகுதிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய   பொலன்னறுவை, குருநாகல், திருகோணமலை,அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி,  நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை,கம்பஹா ,கொழும்பு ஆகிய நிர்வாக மாவட்டங்களின் உள்ளுராட்சி அதிகாரசபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை அத்தாட்சிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்றது. பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு 2424/ 02 ஆம் இலக்கத்தின் கீழ் 2025.02.17 ஆம் திகதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம்  நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மேலதிக உறுப்பினர் பட்டியல் மற்றும் பெண் பிரதிநிதித்துவ பட்டியல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இருப்பினும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த காலப்பகுதிக்குள் பெயர் பட்டியல் விபரங்களை  சமர்ப்பிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதை விரைவுப்படுத்துவதை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்) 76 ஆம் பிரிவின் கீழான கட்டளையின் பிரகாரம்  விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெயர் பட்டியல் விபரங்களை 2025.05.30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கடந்த மாதம் 27 ஆம் திகதி அறிவித்திருந்தது.

வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்களில் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும். வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள மாநகர சபை மற்றும் நகர சபைகளுக்கான மேயர் மற்றும் பிரதி மேயர்,தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் ஒருவாரத்துக்குள் பூரணப்படுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து...

2025-07-11 20:34:31
news-image

30 சதவீத வரி வீதத்தை குறைக்க...

2025-07-11 16:11:53
news-image

மக்கள் நலன் நோக்கிய செயற்பாடுகளுக்காக அரசியல்...

2025-07-11 20:27:05
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-07-11 19:05:39
news-image

கொஸ்கொட சந்தியல் துப்பாக்கிச் சூடு; ஒருவர்...

2025-07-11 19:31:16
news-image

பிரிக்ஸில் இணைவதற்கு முழுமையான ஆதரவு ;...

2025-07-11 19:00:23
news-image

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய  ஒரு தேசமாக...

2025-07-11 19:20:43
news-image

கூட்டுறவுத்துறையில் அரசின் கட்டுப்பாடுகள் 13ஆவது திருத்தத்தை...

2025-07-11 16:41:09
news-image

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு...

2025-07-11 18:55:40
news-image

வெண்மையாக்கும் களிம்பு பாவனை சருமநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை...

2025-07-11 18:24:32
news-image

ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்...

2025-07-11 17:35:29
news-image

ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள்...

2025-07-11 17:40:03